பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் எசமானனும் கார் ஒட்டியும் ஒரு பெரியவர்; காந்தியின் அடியார். அவரை நாம் பார்த்தது இல்லை. அவர் நம் வீட்டுக்கு வருவதாக இருந்தார். நாம் வெளியில் போயிருக்கும்போது வந்து விட்டார். நமக்காக காத்துக் கொண்டு அவர் வீட்டுக்குள் இருக்கிறார். நாம் வெளியில் போய்ப் பின்பு வருகிறோம். நம் வீட்டு வாசலில் ஒரு கார் நிற்கிறது. அவசரமாக உள்ளே நுழைந்த நாம் இடைக்கட்டில் நின்ற ஒருவரைப் பார்த்து மிகவும் உபசாரம் செய்கிறோம். நல்ல அங்கி கால் சட்டை எல்லாம் அணிந்திருக்கிறார் அவர். நாம் செய்கிற உபசாரத்தைப் பார்த்து மிகவும் கஷ்டப்படுபவரைப் போலத் தெரிகிறது. உள்ளே இருந்து வரும் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறோம். நாம் எசமானரை வரவேற்காமல் அவரிடம் சம்பளம் வாங்கும் கார் ஒட்டியைப் புகழ்ந்தோம் என்று அறிந்து வெட்கித் தலை குனிகிறோம். இப்படித்தான் உலகத்தில் உள்ளவர்களிடம் யார் எசமானரோ அவரைப் புகழாமல் எசமானரின் கருவியாக இருந்து உதவி செய்கிறவர்களையே புகழுக்கு உரியவராக எண்ணிப் புகழும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் நமக்கு நன்மை செய்கிறார்கள். என்பது ஓரளவுதான் உண்மை; அவர்கள் எல்லோருக்கும் மேலான தலைவனாக இருக்கிற ஆண்டவனுக்குக் கருவியாக இருந்து நலம் செய்கிறார்கள். எசமானருக்கு உரிய மரியாதையைச் செய்துவிட்டு அவருடன் வந்த வேலைக்காரர்களுக்கும் மரியாதை செய்வது நல்லவர்களுக்கு இயற்கை. ஆனால் எசமானரை மறந்து வேலைக்காரனுக்கு மரியாதை செய்தால் நம் காரியம் வெற்றி அடையாது. நல்ல எசமானராக இருந்தால் நம் அறியாமையைப் புரிந்து கொள்வார். பொல்லாதவராக இருந்தால், வேண்டுமென்றே அவமானம் செய்கிறானே! என்று கோபித்துக் கொள்ளக்கூடும். ஆண்டவன் நல்ல எசமானனாக இருப்பதால் நம்பால் கோபம் கொள்ளாமல் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான். உண்மையிலேயே புகழுக்கு உரியவன் ஒருவன்தான் இருக்கிறான். அந்த ஒருவனைக் குறித்தே. 'பூமிமேல் புகழ்தக்க பொருளே’ என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். 19