பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் தாண்டிவிடுகிறோம். எல்லை சுட்டுகின்ற பிரபஞ்சம் அங்கே இல்லை. எல்லையைச் சுட்டும் மனமும் இல்லை. எல்லையற்ற பரவெளிக்கு, கரையற்ற பேரின்ப வெளிக்கு வந்தாகிவிட்டது. கரை அற்று. இருள் அறுதல் கரை அற்றுப் போனவுடனே, எல்லா எல்லைகளையும் கடந்து வந்த பிறகு, கால இட வரம்புக்கு அடங்காத நிரதிசய ஆனந்தம் உண்டாகிறது. அங்கே எப்படி இருக்கிறது? இருள் அற்று. இதுவரைக்கும் நாம் இருந்தது இருள் உலகம்; புற விளக்கு களின் உதவியை நாடுகின்ற இடம். கண்ணாடி கெட்டியாகப் போடப் போடக் கண் பார்வை குறைவு என்பது போல, விளக்கு களின் எண்ணிக்கை பெருகப் பெருக நம்முடைய புறக்கண் ஒளியும் குறைவு என்பது தெரியும். மட்டமான சரக்குகளுக்குத் தான் அதிக விளம்பரம்; அதிக விளக்குகள் அதிக இருளில் நாம் இருந்து வருவதைக் காட்டுகின்றன. பழைய காலத்தில் இரா வேளைகளில் நட்சத்திர ஒளியில் வரப்பில் நடந்து வருவார்கள். இப்போது சிமெண்ட ரோடில் மாலை வேளையில் நடப்பதற்குத் தடுமாறுகிறோம்; புறக்கண்ணை அகல அகல விரித்துப் பார்க் கிறோம். உள்ளம் இருண்டு கிடக்கிறது; அக ஒளியின்றி இருண்டு கிடக்கிறது. கண்ணைத் திறந்து கொண்டே குருடர்களாக இருக் கிற நமக்குக் கண்ணை மூடினாலா ஒளி தெரியப் போகிறது? கண்ணைத் திறந்து பார்க்கிறவர்களுக்கு ஒளி வேண்டும். கண்ணை மூடிக் கொண்டவருக்கு விளக்கு இருந்தாலும் பயன் இல்லை; இல்லாவிட்டாலும் குறை இல்லை. ஞானிகள் தங்கள் புறக்கண்களை மூடி, அகக் கண் கொண்டு இறைவனைக் கண்டார்கள். நமக்கு அகக்கண் திறக்கவில்லை யாதலாலே புறக் கண்ணை மூடாமலேயே இருக்கிறோம். அகக்கண் திறந்து விட்டவர்களுக்குப் புறக்கண்ணால் பயன் இல்லை; புற ஒளியால் பயன் இல்லை. இவ்வுலகில் நாம் காணுகின்ற ஒளி எல்லாம் வெறும் ஒளி அல்ல; இருள் படர்ந்த ஒளி. 'மா இருள் ஞாலம்' 235