பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே" என்று உலகம் எல்லாம் வாழவேண்டுமென விரும்பிக் கேட்கிற ஞானசம்பந்தப் பெருமான், தாம் தனியாக வாழவேண்டுமென்று சொல்லவில்லை. உலகம் எல்லாம் வாழ வேண்டுமென்று விரும்புகிற உள்ளமே பெரியவர்களுடைய உள்ளம். உலகம் வாழ சிவபிரான் தவம் பண்ணுகிறார். தாம் வாழவேண்டுமென்று தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். உலகம் எல்லாம் வாழவேண்டு மென்பதற்காக அருட் சக்தியை நோக்கித் தவம் செய்கிறார். பராசக்திதான் உயிர்களுக்கெல்லாம் திருவருள் செய்ய வேண்டும். அறம் செய்கிறவள் அவள்தான். 'ஐயா சம்பாதிப்பார்; ஆனால் சாவி அம்மாவிடம் இருக்கிறது' என்று பலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்கிறோம். எத்தனைதான் தாம் சம்பாதித்தாலும் செலவழிக்கின்ற முறை பெண்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதற்காக மனையாட்டி யிடத்தில் சாவி கொடுத்து வைக்கிற பெருமக்கள் பலர். இப்படிச் செய்வதற்கு அன்றைக்கே எம்பெருமான் வழிகாட்டியிருக்கிறார். இரு நாழி நெல் அம்பிகையிடம் கொடுத்தார். அதைக் கொண்டு உலகம் எல்லாம் உய்ய முப்பத்திரண்டு அறம் செய்தாள் காமாட்சி. அவளைத் தம்முடைய அருளாகிய பொருள் வைக்கிற பெட்டகமாகக் கொண்டிருக்கிறார் பரமசிவம். பராசக்தியின் மூலமாக வெளிப்படாமல் சிவபெருமானே நேராகக் கொடுக்கும் எதுவும் உலகத்திற்குப் பயன்படாது. உலகுக்கு அருள் செய்யும் பொருட்டு அந்தப் பராசக்தியைத் தட்டி எழுப்ப எம்பெருமான் தவம் பண்ணினார். கந்தப் பெருமானைத் தோற்றுவிக்கத் தவம் செய்தார். குமார ஜனனத்திற்குக் காரணம் அவர் பண்ணின தவம். சிவ பெருமான் பல பல திருவிளையாடல்களில் எத்தனையோ விதமான கோலங்களைப் பூண்டிருக்கிறார். நமக்கெல்லாம் அருள் வழங்கும் ஞான பண்டித சாமியைத் தோற்றுவிக்க அப்பெருமான் 293