பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இறைவன் ஆணை 'என் கண்முன்னால் நின்று எனக்கு உதவி செய்கிறவன் இவன்தானே? ஆண்டவன் உதவி செய்கிறான் என்றால், அவனை எனக்குத் தெரியாதே' என்ற கேள்வி உண்டாகும். நம்முடைய கிராமத்தில் மணியக்காரர் வேலை செய்கிறார். அவரைக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதி என்று சொல்கிறோம். 'நான் ராஷ்டிர பதியைப் பார்த்தது இல்லையே நான் எப்படி அவருக்குக் குடியா வேன்?' என்று யாராவது சொல்ல முடியுமா? 'உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்' என்று சீவகசிந்தாமணி ஆசிரியர் சொல்கிறார். அரசன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவன் ஆணை நாடு முழுவதும் காத்து நிற்கும். எந்த இடத்திலும் அந்த ஆணை நிலவும். அவன் விழித்துக் கொண்டிருந்தாலும், தூங்கினாலும் ஆணை தூங்குவதில்லை. அவன் ஆணை செவ்வையாக இருந்தால் அவன் வேலைக்காரர்கள் தூங்காமல நாட்டைப் பாதுகாப்பார்கள். அப்படிய அவர்கள் காப்பதற்கு மூலகாரணம் அவனுடைய ஆணை. இது அரசியல் உலகில் நன்றாக விளங்கும் செய்தி. இது போலத்தான் உலகம் முழுவதும் இறைவன் ஆணையினால் இயங்குகிறது. அவனுக்கு அடங்கிய அதிகாரிகளாகவும், தொண்டர் களாகவும் பல தேவர்கள் இருக்கிறார்கள். உலகத்திலுள்ள மக்கள் யாவருமே அவன் கருவியாக இயங்குகிறார்கள். இறைவன் ஆடா மல் அசங்காமல் இருக்கிறான். ஆனால், அவன் அருள் ஆணை யினால் உலகம் எல்லாமே ஆடுகிறது; ஒடுகிறது; இயங்கி வரு கிறது. பம்பு தண்ணீரை இறைக்கிறது. ஹீட்டா வெம்மையைக் கக்குகிறது. விசிறி சுற்றுகிறது. இவற்றுக்கு எல்லாம் காரணமான மின்சார மூலக்கருவி அசையாமல் ஆடாமல் இருக்கிறது. அசையாமல் ஆடாமல் இருக்கிற அந்தப் பகுதியே ஆடி வேலை செய்கிற பகுதிகளின் இயக்கத்திற்கு எல்லாம் மூலகாரணமாக இருக்கிறது. இது விஞ்ஞானத்தில் எப்படி உண்மையோ, அது போல் ஆண்டவன் ஆடாமல் அசையாமல் இருந்தாலும் மற்ற வற்றையெல்லாம் ஆட்டி வைக்கிறான் என்பதும் உண்மை. பரஞ்சோதி முனிவர் இதைச் சொல்கிறார். 2O