பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "எண்கொண்ட தொண்ணுற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனும்' என்று ஒட்டக்கூத்தர் பாடுகிறார். அவன் உடம்பிலுள்ள 96 புண் களும், அவன் 96 முறைகள் பகைவர்களோடு போரிட்டு வெற்றி கொண்ட விழுப்புண்கள்; அவை வெற்றியைக் காட்டும் பதக்கங் களாக இருந்தன. இந்த உலகத்திற்கு முதலாக எந்தப் பெருமாள் இருக்கிறாரோ உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்தாலும் எவர் தாம் அழியாமல் நித்தியப் பொருளாக விளங்குகிறாரோ அவர் கழுத் தில் உள்ள கபாலமாலை நமக்கு இவ்வுலகத்தின் நிலையாமை யையும், இவ்வுலகத்தைப் படைக்கின்ற பிரம்மாவின் நிலை யாமையையும் காட்டுகிறது; அவருடைய சத்திய நிலையையும் உணர்த்துகிறது. அதனால் அந்த வெண்தலை மாலை அவர் பெருமைக்குப் பட்டயமாக, அவர் அழகுக்கு அழகு செய்கிற அணிகலனாக விளங்குகிறது. அகிலம் உண்ட மால் அருணகிரிநாத சுவாமிகள் பாடுவது கந்தர் அலங்காரம். கந்தர் அலங்காரக் கோயிலைச் சொல்லென்னும் கற்களைக் கொண்டு கட்டுகிறார். மூலமூர்த்தியாகிய எம்பெருமானின் அலங்காரத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த வீட்டிலுள்ள மற்ற வர்களின் அலங்காரத்தையும் பாடிக் கொண்டு போகிறார். 'நித்திய சத்தியமூர்த்தியாகிய பரமேசுவன்தான் அவனுடைய தந்தை' என்பதை முன் அடியில் அலங்காரமாகச் சொன்னார். பின்னர், உள்ளே படுத்திருக்கிற முருகப்பெருமானது மாமனாரை அழகுபடுத்திப் பேசுகிறார். அகிலம் உண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய். அருணகிரிநாத சுவாமியின் சமரச உணர்வை இங்கே பார்க்க வேண்டும். பெரியாழ்வார் கண்ணபிரானது செங்கீரைப் பருவத்தைப் பாடுகிறார். எடுத்தவுடனேயே, அந்தச் சின்னக் குழந்தை, தொட்டி லில் இருந்து விளையாட வேண்டிய குழந்தை, இந்த உலகம் உய்வதற்காக என்ன செய்தான் என்பதைச் சொல்ல வருகிறார். 298