பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அகிலம் உண்ட மாலுக்கு என்று புகழ் பேசுகிறார். அகிலம் எல்லாவற்றையும் திருமால் உண்டான். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக அகிலம் யாவையும் தன் வயிற்றுக்குள் கருக்கொண்டான். கருக்கொண்ட பெண்களைப் பார்த்தால், எப்போது பார்த்தாலும் மயங்கி மயங்கி உறங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படி உலகம் யாவற்றையும் தன் வயிற்றுக்குள் கருக்கொண்டு பைய ஆலிலைமேல் மால் அறிதுயில் செய்கிறான். அவை உய்ய, மறுபடியும் எப்படிப் படைத்துக் காப்பது என்று யோசித்துக்கொண்டே யோக நித்திரை செய்கிறானாம். அந்த மாலுக்கு ஆபரணமாக இருப்பது எது? அகிலம் உண்ட மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய். துழாயின் பெருமை தண்ணந்துழாய் - குளிர்ந்த அழகிய துளசிமாலை. மண்ணை உயிர்க்கூட்டங்களோடு தன் திருவயிற்றில் வைத்திருக்கிற பெருமான் தண்ணந்துழாய் மாலையை அணிந்திருக்கிறான். அகிலம் உண்ட திருமாலுக்கு, என் சுவாமியின் மாமாவுக்கு, அலங்காரமாக இருப்பது தண்ணிய அழகான துளசிமாலை என்பது அருணகிரியார் சொல்லும் வருணனை. துழாய் மாலையின் பெருமையைத் திவ்யப்பிரபந்த வியாக்கி யானத்தில் எழுதி இருக்கிறார்கள. மற்ற இலைகளுக்கு வாசனை இல்லை; மலர்களுக்குத்தான் வாசனை உண்டு. ஆனால் துளசி இலைக்கே வாசனை உண்டு. ஆகையால் அப்பெருமானுக்கு அவ்விலைகளிடத்தில் ஆசை. அதை அணிந்து கொண்டிருக்கிறான். ஆலுக் கணிகலம்வெண்டலை மாலை அகிலம்உண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய் என்று அப்பா, மாமா ஆகிய இருவரைப் பற்றியும் பாதிப்பாட்டில் அலங்காரம் பண்ணினார். அடுத்து எம்பெருமானைப் பற்றிச் சொல்கிறார். முருகன் காலுக்கு அணிகலம் அவன் திருவடிக்கு அணியாக இருப்பவை என்ன? 3OO