பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் - மயில்ஏ றும்ஐயன் காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும். மயில் ஏறும் ஐயன் என்று சொல்கிறபோது ஓர் அழகான காட்சியை அவர் நினைக்கிறார் என்று தோன்றுகிறது. எங்கோ வேகமாகப் போக எண்ணிச் சட்டென்று தம் காரில் ஏறிக் கொள் வதைப் போல், மயில்மேல் முருகன் ஏறும்போதே எங்கோ வேக மாகப் போகப் போகிறான் என்று தெரிகிறது. அவன் மயிலில் ஏறிவிட்டான், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு. அவன் பூவுலகத்திற்குப் போக மயில்மேல் ஏறிவிட்டதைத் தேவர்கள் பார்த்தார்கள். எங்கோ இருக்கிற பக்தர்கள் எங்கள் பெரு மானைப் பயன்படுத்திக் கொள்ள, அவருக்கு மிக அருகில் இருந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லையே! என்னும் நினைப்பு அவர்களுக்கு உண்டாயிற்று. நல்ல தடாகத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. அதே குளத்தில் வாழும் தவளைக்கு அந்தத் தாமரையின் வண்ணத்தையும், மென்மையையும் பார்த்து, அதனூடே இருக்கிற தேனை அனுபவிக்கத் தெரியவில்லை. எங்கோ காட்டினிடையிலிருந்து வருகிற வண்டு அங்கே வந்து அந்தத் தாமரைத் தேனைப் பருகி இன்னிசை பாடுகிறது. "தண்டா மரையின் உடன்பிறந்தே தண்டேன் உண்ணா மண்டுகம் வண்டோ கானத் திடையிருந்து வந்தே கமல மதுஉண்ணும்” என்று ஒருவர் பாடுகிறார். தவளைபோல அறிவு இல்லாதவர்கள் தங்கள் பக்கத்திலேயே அறிவாளிகள் இருந்தும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தாமரைத் தேனைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருக்கும் மண்டுகம் போல நாம் இருக் கிறோமே! நம்மிடையே இருக்கும் குழந்தைப்பிரானை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லையே. பூலோகத்தில் இருக்கும் மனிதர்கள் அவன் அருளைப் பெற்று உய்கிறார்களே. அவர் களுக்கு அருள் செய்ய எம்பெருமானும் மயில் ஏறிவிட்டானே என்கிற உணர்ச்சி தேவர்களுக்கு வந்ததோ இல்லையோ, முப்பத்து முக்கோடி தேவர்களும் கீழே விழுந்து முருகப் பெருமானை வணங்குகிறார்கள். 'எம்பெருமானே! நீ எங்களுக்கு அருள் செய்யமாட்டாயா என்று தங்கள் தலைகளை அவன் காலடியை 3Of