பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் மாக, ஒவ்வொன்று சொன்னால் முருகனுக்கு இரண்டு அலங்கார மாவது சொல்ல வேண்டாமா? பெரியவர்களைவிடக் குழந்தை களுக்கே அதிக அலங்காரம் செய்வது வழக்கம். தலை நிமிர்ந்து நின்ற தேவர்கள் எல்லாம் தலை தாழ்த்தி விழும்படியாகத் தேவ லோகத்தில் முருகன் செய்தமையினால் அங்கே வானோர் முடிகளே அவனுக்கு அலங்காரமாக விளங்கின. பூவுலகத்தில் மெத்தென்ற அன்பு மணம் கமழும் உள்ளம் படைத்த அடியார் களுடைய கூட்டத்திலோ மெத்தென்று அவர்கள் அணிகிற கடம்ப மலர் மாலைகளே அவன் காலுக்கு அணி கலனாக விளங்குகின்றன. தேவர்களுடைய முடிகளையும் பக்தர்களுடைய கடம்ப மலர் மாலைகளையும் தன் திருவடிக்கு அணிகலங்களாக ஏற்றுக் கொண்ட பெருமான் தன் திருக்கரத்தில் ஞான சக்தியாகிய வேலை வைத்திருக்கிறான். முருகனைத் தொழாவிட்டாலும் அவன் வேலைத் தொழுதால் போதும். 'கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண்டு அயர்கினும் வேல்மறவேன்" என்று அருணகிரியார் முன்பு சொல்லியிருக்கிறார் அல்லவா? வேலனை நினைப்பது எளிதான காரியம் அல்ல; அவன் முழுத் திருவுருவத்தையும் மனத்திலே எழுதிக் கொள்ள வேண்டு மென்றால் நீண்ட நாள் தவம் செய்ய வேண்டும்; தியானம் செய்ய வேண்டும். நம்மால் அத்தகைய உயர்ந்த சாதனைகளைச் செய்து அவன் திருக்கோலத்தை ஓங்கார ஒளிவட்டத்திற்குள் கண்டு துங்கத் தெரியாவிட்டாலும், அவன் திருக்கரத்திலுள்ள வேலை யேனும் நினைக்கக்கூடாதா? அது எளிதானது. வேலையே முருக னாக ஆவாகனம் பண்ணி வணங்கும் வழக்கமும் உண்டு. ஆறுமுகம் உடைய கடவுளைப் போலவே வேலுக்கும் ஆறுபட்டைகள் உண்டு. சிவபெருமானைவிட எளிதில் ஆராதிக்கத் தக்கவன் முருகன். முருகனிடத்தில் நம் நெஞ்சத்தை எளிதில் ஈடுபடச் செய்யத் தக்கதாக இருக்கிறது வேல். அவன் திருக்கரத்திலுள்ள அந்த வேலுக்கு அலங்காரம் எது? கந்தப்பெருமானின் பெருமையும் வேலின் பெருமையும் ஒன்று. வேல் வீரமுடையது. வெல்லுவது வேல். அதனால் வீர 303