பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் வாளா இருப்பவன் 'பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம் ஆவண்ணம் மெய்கொண்ட வன்தன் வலிஆணை தாங்கி மூவண்ணல் தன்சந்நிதி முத்தொழில் இயற்ற வாளா மேவண்ணல் அன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்.' பிரம்மா படைப்புச் செயலைச் செய்கிறார். திருமால் ரட்சிக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ருத்திரர் சங்காரத் தொழிலை நடத்துகிறார். இந்த மூன்று பேரும் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த மூவர் வேலைக்கும் மூலகாரணமான ஆணையை வைத்திருக்கிறான் பரமேசுவரன். பூவுக்கு ஒரு வடிவம் உண்டு; நிறம் உண்டு; மணம் உண்டு. அந்த மூன்றும் தனித்தனியாகப் பிரிக்க இயலாதவை. மூன்றும் ஒட்டியிருப்பது போலச் சத் சித் ஆனந்தம் என்ற மூன்று இயல்பும் ஒன்றாக இணைந்து அமைந்த பரமேசுவரன் சும்மா இருக்கிறான். மூன்று மூர்த்திகளும் தன்னுடைய ஆணையைத் தாங்கித் தன் சந்நிதானத்தில் தொழிற்படும்படி இயக்கிக் கொண் டிருக்கிறான். அவன் இயக்கி வைப்பதனால்தான் மற்றவர்கள் இயங்குகிறார்கள். ஒரு கல்யாண வீட்டில் அங்கும் இங்கும் ஒடிச் செயற் படுகிறவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் தலைவர்களாக இருப்பது இல்லை. தலைவன் சும்மா கையைக் கட்டிக் கொண்டு நின்றா லும், அவன் நிற்பதனாலேயே அவனைப் பார்த்துப் பலர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒடியாடி வேலை செய்கிறவர்கள் யாவருமே கடைநிலை ஊழியர்கள்தாம். அது போல் இறைவன் வாளா இருந்தாலும் அவன் வலியாணை தாங்கி மும்மூர்த்தி களும் செயற்படுகிறார்கள்; முப்பத்து முக்கோடி தேவர்களும் தொழிற்படுகிறார்கள். உலகம் இயங்குகிறது. அண்ட பகிரண்ட சராசரங்கள் இயங்குகின்றன. தாய் குழந்தைக்கு உணவு தரு கிறாள். பணக்காரன் ஏழைக்கு உணவு போடுகிறான். வலியவன் பல பல உதவிகளை மெலிந்தவனுக்குச் செய்கிறான். இப்படி எல்லாவற்றுக்கும் எல்லா இயக்கத்திற்கும் மூலமாக இருப்பது சும்மா இருக்கிற பரமேசுவரன் ஆணை. கால் நடக்கிறது, கை கொடுக்கிறதென்றால் கையும் க. தாமாகவே செயற்படுகின்றனவா? உயிர் என்ற ஒன்று இ 21