பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் அருணகிரிநாத சுவாமிகள் தமக்குக் கிடைத்த இன்ப அநுபவத்தை நினைந்து பெருமிதம் கொள்கிறார். அதை இரண்டு வகையாக இந்தப் பாட்டில் சொல்கிறார். 'எனக்கு எம்பெரு மானிடத்திலிருந்து கிடைத்த அநுபவத்தை எப்படிப் பாராட்டு வது? அவனை நினைந்து இன்புறுவதற்குரிய புத்தி எனக்கு வந்திருக்கிறதே! அது எப்படி வந்தது? என்று தாமே நினைந்து பார்க்கிறார். மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் இறைவன் திருவருள் நினைப்பு இல்லாதவர்களாக இருந்தால், தங்களுடைய பழைய நிலையை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். 'இவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா? இன் றைக்கு என்னவோ பெரிய மனிதன் ஆகிவிட்டதாகத் தலை திரும்பி இருக்கிறானே' என்று பிறர் சொல்லிக் காட்டும்படியாக நடந்து கொள்வார்கள். ஆனால் நல்ல மனிதராக இருந்தால் முன்பு தாம் மிகவும் இன்னற்பட்டு வாழ்ந்ததை நினைந்து, "எம் பெருமான் திருவருளால் அல்லவா நமக்கு இந்த நிலை கிடைத்தது?' என்று சொல்லிக் கொண்டே இருப்பார். செருக்கும் அதிசயப் பெருக்கும் தமக்குக் கிடைத்த உயர்நிலையைப் பற்றித் தாமே இப்படி மகிழ்ச்சி அடையலாமா? அந்த மகிழ்ச்சி தம் முயற்சியை நினைந்து உண்டானால் செருக்காகும். 'உயர்ந்த நிலைக்கு வரத் தகுதி எதுவும் இல்லாதபோது, இறைவன் திருவருளினால் இத்தகைய நிலைக்கு நாம் வந்தோம்' என்ற மகிழ்ச்சி கர்வ மாகாது; அதைத்தான் அநுபவ அதிசயப் பெருக்கு என்று பெரிய வர்கள் சொல்லுவார்கள். 'நான் அருளதுபவத்தைப் பெறவேண்டு மென்று எண்ணி முயற்சி எதுவும் செய்யவில்லை; அதைப் பெறத் தக்க தகுதியும்