பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஒவ்வொரு நாளும் பார்க்கும் போது குருக்களுக்குச் செட்டியார் சிறந்த பக்தராகவே தோன்றினார். ஒருநாள் குருக்களின் வீட்டுக்கு அவருடைய நண்பர் ஒருவர் வந்திருந்தார். "எட்டு மணிக்கே கோயிலைப் பூட்டிக் கொண்டு வாருங்கள்; வெளியே போகலாம்' என்று அவர் சொன்னார். "அப்பப்பா அதெல்லாம் முடியாது. எங்கள் ஆலயத்தின் தர்ம கர்த்தா பத்து மணிக்குமேல்தான் வருவார். அவர் மிகுந்த பக்தர் அவருக்குத் தரிசனம் செய்து வைத்தபிறகுதான் நான் வரமுடியும். என்று அர்ச்சகர் சொல்லி, செட்டியார் பிரார்த்தனை செய்வதையும் சொன்னார். அவருடைய நண்பருக்குச் செட்டியாரின் பக்தியைச் சோதிக்க வேண்டுமென்ற ஆசை மூண்டது. 'அப்படியா? நான் இன்றைக்கு ஒரு காரியம் செய்கிறேன் பாருங்கள்” என்று சொன்னார். அன்று இரவு செட்டியார் யாரும் இல்லாத வேளையில் பத்து மணிக்குக் கோயிலுக்கு வரும்போது சுவாமி விக்கிரகத்திற்குப் பின்னால் அன்பர் ஒளிந்து கொண்டார். குருக்கள் வழக்கம் போலச் செட்டியாருக்குத் தரிசனம் செய்து வைத்துவிட்டு, வெளி மண்டபத்திற்கு வந்து விட்டார். வழக்கம்போல், 'ஆண்டவனே உன்னை நான் என்றும் மறக்காமல் இருக்கிறேன். என்னைக் கூண்டோடு கைலாசம் சேர்த்துக் கொள்ளவேண்டும்' என்று இறைஞ்சினார் செட்டியார். சுவாமி விக்கிரகத்திற்குப் பின் இருந்த குருக்களின் நண்பர் இதுதான் சமயம் என்று தம் இரண்டு கைகளையும் விக்கிரகத்தை அனைத்தாற்போல நீட்டிக் கொண்டு, 'பக்தா வா.வா.வா.." என்றார். செட்டியார் வெலவெலத்துப் போனார். திரும்பிப் பார்க்காமல் ஒட்டம் பிடித்தார். 'என்ன ஐயா என்ன ஐயா!' என்று வெளியில் இருந்த குருக்கள் கேட்ட தற்கு, "பூட்டையா கதவை; உம், சீக்கிரம் பூட்டிக் கொண்டு வீட்டுக்கு ஒடு' என்று கத்திக் கொண்டே ஓடிப் போனார். அன்றைத் தினத்திலிருந்து கோயிலில் கூட்டம் இருக்கும் போதே அவர் வந்துவிட்டுப் போவது வழக்கமாயிற்று. கூண்டோடு கைலாசம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவனிடம் செட்டியார் கேட்டுக் கொண்டது உண்மையாக இருக்குமானால், 'பக்தா வா வா வா' என்றவுடன் அதைக் கேட்டு உவகை கொண்டு, அவர் நேரே சந்நிதானத்திற்குத்தானே 312