பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பிறனுக்காக நாம் சாப்பிடுவது இல்லை. நமக்காகத்தான் சாப்பிடுகிறோம். இறைவனிடத்தில் வைக்கிற அன்பும் பிறருக் காக அல்லாமல் நமக்காவே, நாம் உய்வு பெற வேண்டும் என்று தற்காகவே இருக்க வேண்டும். நாம் இறைவனிடததில் செலுத்து கிற அன்பு மெய்யான அன்புதானா என்பதைச் சொல்வதற்கு, பிற சாட்சி எதுவும் வேண்டாம். "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்று வள்ளுவர் பேசுகின்றார். ஒவ்வொருவருக்கும் அவரவர் களுடைய நெஞ்சே சாட்சி. உண்மையான அன்புக்கு வெளித் தோற்றம் இல்லை. மனைவி தன் கணவனிடத்தில் காட்டுகிற அன்பைப் பிறர் காண முடியுமா? அது அவள் கணவனுக்குத் தெரியும். அவளுடைய நெஞ்சுக்குத் தெரியும். உண்மையான அடியார்கள் ஆண்டவனிடத்தில் வைக்கிற மெய்யான அன்பைப் பிறர் காணமாட்டார்கள். பிறர் காண அன்பு செய்வார்களுடைய நெஞ்சம் போலி அன்புடையதாகவோ, சோதனையில் தளர்ந்து விடுவதாகவோதான் பெரும்பாலும் இருக்கிறது. சிலர் துன்பப்படுங்கால் இறைவனை நினைப்பார்கள் இன்பம் வரும்போது தம் முயற்சியினால் விளைந்தது போன்று செம்மாந்து நானே நானே என்று இரணியன் மாதிரி ஆகி விடு கிறார்கள். இரணியம் என்றால் வடமொழியில் தங்கம் என்று பொருள். பணம் சேரச்சேரத் தம் சுற்றத்தார்களையும், உலகத்து மக்களையும் மறப்பது கிடக்கட்டும்; இறைவனையே மறந்து விடுவார்கள். நல்லது வந்தாலும் இறைவன் நினைப்பு உடையவர்களுக்கு அகங்காரம் விளையாது. பொல்லாதது வந்தாலும் அவர்களுக்குப் பிறர் மேல் கோபம் உண்டாகாது. போற்றுதல் கிடைத்தாலும், துற்றுதல் கிடைத்தாலும் எல்லாம் இறைவனுக்கே உரியவை என்று நினைக்கிறவர்கள் மனம் ஒருமைப்பட்டு இறைவனிடத்தி லேயே இருக்கும். எத்தகைய சோதனைக்கும் தளராத மெய்யன்பு உடையவர்கள் அவர்கள். - "நற்றவாஉனை நான்மறக்கிலும் சொல்லும்நா நமச்சிவாயவே" என்கிறார் சுந்தரர், - 3.14