பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பழக்கம் முறுக முறுகத்தான் அவனைக் கண்ட மாத்திரத்திலே கும்பிடுகிற வழக்கம் உண்டாகும். பின்னும் பழக்கம் அதிகமானால் சந்நிதானத்திலே நின்று துதிகளால் அவனைப் போற்ற முடியும். செல்வதற்கு அன்பு வேண்டும். சென்று போற்றுவதற்கு மெய்யன்பு வேண்டும். சென்று போற்றி உய்வதற்குச் சோதித்த மெய் அன்பு வேண்டும். சோதித்த மெய்யன்பினாலே ஏற்படுகிற பயன் உய்தல். யாரைப் போற்றினார்? முருகனை; அந்த முருகன் புகழை விரிக்கிறார். முருகன் போதனை சிவபெருமான் தம்முடைய இடப் பாகத்திலே உமாதேவியை வைத்துக் கொண்டிருக்கிறார். அவள் அருளின் வடிவம்; பச்சைப் பசேல் என்று இருக்கும் திருமேனி உடையவள். அவளைத் தம் பாகத்தில் அவர் கொண்டிருப்பதனால் அவருடைய பாதித்திரு மேனி பச்சைப் பசேல் என்று இருக்கிறது. பாதித் திருவுருப் பச்சென்றவர். தம்முடைய பாதித் திருவுருவம் பச்சைப் பசேல் என்று இருக்கிற பெருமான், அர்த்த நாரீசுவரர்; அவருக்கு முருகன் போதித்தான். அவருக்கு அவன் எதைப் போதித்தான்? தன் பாவனையைப் போதித்த நாதனை. தன் பாவனையைப் போதித்தானாம். இதற்குப் பொருள். 'தான் பாவித்த பாவனையைப் போதித்தான் என்று சொல்வ துண்டு. தன்னைப் பாவிக்கிற பாவனையைப் போதித்தான் என்று கொள்வதே நயமாக இருக்கும். சிவபெருமான் வேறாகவும், பெருமாட்டி வேறாகவும் இருக்கிற நிலை மாறி அவனும் அவளும் ஒரு கோலத்திலே நின்றார்கள். அந்த அர்த்தநாரீசுவரக் கோலத்தில் வலப் பாகம் பரமேசுவர ராகவும், இடப்பாகம் எம்பெருமாட்டியாகவும் தோன்றின. ஒரு பாகம் செக்கச் செவேல் என்று இருக்கும்; மற்றொரு பாகம் பச்சைப் பசேல் என்று இருக்கும். ஒன்று ஞானமயம்; மன் 316