பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 “நாதா குமரா நம என்று அரனார்' ஓதி வணங்கினார் என்று கந்தர் அநுபூதியில் வருகிறது. "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண! முத்திக்கொரு வித்துக் குருபர! - எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் - முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் - அடிபேண' என்று சண்முகநாதன் குருபரனாக இருந்த நிகழ்ச்சியை அருண கிரியார் திருப்புகழில் முதலில் சொல்கிறார். 'முத்துப் போன்ற தோற்றத்தைத் தரும் பற்களை வரிசை யாக உடைய தேவயானையின் கணவா! ஞானவேல் ஏந்திய சரவணபவனே! முத்திக்கு வித்தாக உள்ள குருபரனே! எனத் தோத்திரம் செய்து நின்ற முக்கண் கொண்ட பரமனுக்கு வேதத் தில் முன் இருக்கும் பிரணவப் பொருளை உபதேசம் செய்த வனே' என்று பாடுகிறார். சிவபெருமானுக்கு அவன் பிரணவ மந்திரம் உபதேசம் பண்ணினது இருக்கட்டும். அதற்கு முன்னதாகவே தன்னுடைய பாவனையை, தன்னை எப்படிப் பாவிக்க வேண்டும் என்பதை, போதித்தான். உபதேசம் செய்த வரலாறு முருகன் கைலாசத்தில் விளையாடிச் கொண்டிருந்த போது மிகவும் விரைவாகப் பிரமன் சிவபிரானைத் தரிசிக்கப் போய்க் கொண்டிருந்தான். வழியில் விளையாடிக் கொண்டிருந்தான் அழகிய முருகன். அழகிய பொருள்களையும் அழகிய குழந்தை யையும் கண்டால் கண் உடையவர்கள் பார்ப்பார்கள். பார்க்காமல் போகிறவன் கண் இல்லாதவன். பிராமாவுக்குக் கண் இல்லையா? நாலு தலையும் எட்டுக் கண்களும் உண்டு. அழகான மயிலுக்குப் பக்கத்தில் அழகு வடிவாக நிற்கும் முருகனைப் பார்த்தும் பார்க்காதவன்போல, 3.18