பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஞானபண்டிதன் என்ன செய்தான் தெரியுமா? அது மிகவும் இரகசியமானதாயிற்றே. குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்ய வேண்டிய பொருள் அல்லவா அது? எனக்கு அப்பா என்கிற பாவனையோடு நீங்கள் அதைக் கேட்டால் நான் எப்படிச் சொல்வது? என்னைக் குருவாகப் பாவித்து நீங்கள் சிஷ்யனாக வந்தால் அல்லவா சொல்ல முடியும்?' என்று தன்னைப் பாவிக்க வேண்டிய பாவனையை முதலில் போதித்தான். ....தன் பாவனையைப் போதித்த நாதனை. பாவனையை என்றால் பிரணவ மந்திரத்தை என்று பொருள் கொள்ளக் கூடாது. பிரணவ மந்திரத்தைப் பின்னால் போதிக் கிறான். அதைப் போதிப்பதற்குமுன், 'நான் உங்களுடைய குழந்தை என்று நீங்கள் வைத்திருக்கிற பாவனையை மாற்றி, நான் குரு நீங்கள் மாணாக்கர் என்ற பாவனையைக் கொள்ள வேண்டும்' என்பதைப் போதித்தான். சிவபெருமான் அவனைக் குருவாகப் பாவித்து உபதேசம் கேட்டார். அடையாளம் குமர குருபரனுக்கு அடையாளம் உண்டு. அவன் ஞானத் தினால் தலைவன் ஆனான். அந்த ஞான சக்தியை அவன் எப்போதும் கையில் வைத்திருக்கிறான். என்னைக் குருவாகக் கொண்டு நாடி வருகிறவர்கள் எல்லோருக்கும் ஞானத்தைத் தருவேன் என்பதற்கு அடையாளமாக ஏந்தி இருக்கிறான், "வேலே விளங்குகையான்" என்றும், - “வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி' என்றும் முன்பே அருணகிரியார் குறிப்பிட்டிருக்கிறார். அஞ் ஞானத்தைப் போக்கடிக்கும் ஞானவேல், அஞ்ஞான மயமாகிய பகைவர்களோடு போர் செய்து ஒறுக்கும் ஞானவேல், போர் வேல் அவன் கையில் விளங்கிக் கொண்டிருக்கிறது. பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் புேர்வேலனை. 鳴 & 32Ο