பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் ஒருவர் எனக்கு ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுக்கிறார். அதைப் பாங்கில் கொண்டுபோய்க் கொடுக்கிறேன். நான் கேட்ட வண்ணம் அங்கேயுள்ள 'காஷியர் ஐந்து ரூபாய் ஆகவும், பத்து ரூபாய் ஆகவும், சில்லறையாகவும் கொடுக்கிறார். நான் கேட்ட படி கொடுக்கிறவர் அவர் தாமே? 'ஐயா நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள்; நன்றாக வாழவேண்டும்' என்று சொல்லிக் புகழலாமா? தாமதம் பண்ணாமல் கொடுத்ததற்கு ஒரளவு அவரை வாழ்த்தலாம். ஆனால் நமக்கு யார் செக் கொடுத்தாரோ அவரே பெரிய புகழுக்குக் காரணமானவர். அவர் ஐந்நூறு ரூபாய் என்று எழுதியிருந்தால் 'காஷியர் நமக்குத் தேவை ஆயிரம் என்று சொன்னால் கொடுத்து விடுவாரா? இந்த ஆயிரம் ரூபாய் கொடுப் பதற்குக் காரணமாக இருந்தவர் செக்கில் கையெழுத்துப் போட்ட முதலாளி. அவரைப் புகழவேண்டும் என்பதே பகுத்தறிவுக்கு ஒத்த செயல். புகழ்வதற்கு உரியவன் கவே, உலகில் நடக்கின்ற எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருக்கிற ஆண்டவனை நன்றாகப் புகழ்ந்து வாழ வேண்டும். அவன் ஆணைக்குக் கருவியாக அருகில் இருந்து உதவி செய்கிறவர்களை ஒரளவு புகழ்வதில் தவறு இல்லை. துன்பம் வரும்போது, 'இந்த ஆண்டவனுக்குக் கண் இருக்கிறதா?” என்று திட்ட நமக்கு வாய் இருக்கிறது. ஆனால் இன்பம் வரும் போது அதற்குக் காரணம் இறைவன் என்பதை மறந்துவிடு கிறோம். நம்முடைய வசைக்கு ஆளாகும் ஆண்டவன் நம் புகழுக்கும் ஆளாக வேண்டாமா? உண்மையில் எம் பெருமான் தான் எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்கிறான் என்று தெரிந்து கொள்ளவேண்டும். அவன் நமக்குப் பல வகையில் உதவி செய்கிறவன். ஆகையால் நாம் அவனைப் புகழவேண்டும், சிறப்பாகப் புகழவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவன் புகழ்தான் உண்மையான புகழ். புகழைப் போற்றுதல் இறைவனோடு சார்ந்த பொருள்களை எல்லாம் மரியாதை யாகச் சொல்வது நம் தமிழ்நாட்டு மரபு. அவன் மேனியைத் திருமேனி என்பார்கள். அவன் அடியைத் திருவடி என்பார்கள். க.சொ.1V-3 23