பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அந்த நுகர்ச்சியைப் பெறவேண்டுமென்ற ஆசையே அதிக மாகிறது. ருசி கண்ட பூனை உரியை எட்டியெட்டித் தாவுவது போல, நுகர்ச்சி பெற்ற இந்திரியங்கள் மேலும் மேலும் அந்த நுகர்ச்சியினிடத்தில் ஆசை கொள்கின்றன. ஒருமுறை ஒருவகையான இன்பத்தை அநுபவித்தால் அதனு டன் திருப்தி அடையாமல் மீட்டும் மீட்டும் அதை அதை அநுப விக்க வேண்டுமென்ற ஆசை மனத்தில் வளர்கிறது. பிறவி முழுவதும் இன்பம் அடைந்தாலும் மேலும் இன்பம் நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்றும், அதற்கேற்றபடி பிறவியும் நீளவேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம். இத்தகைய ஆசை நிறைவேறாமையினால், அடுத்த பிறவியிலாவது அந்த ஆசையை இவன் பூர்த்தி செய்து கொள்ளட்டும் என்ற கருணையினால் ஆண்டவன் மேலும் பிறவியைத் தருகிறான். அந்தப் பிறவியிலும் நம்முடைய ஆசைகள் வளருகின்றனவே யொழிய நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. இப்படி இடையறாது வருகின்ற ஆசையினால் பிறவியும் இடையறாது வருகின்றது. திருப்தி இல்லாத இந்திரியங்களை ஆண்டவனுடைய பக்கத் தில் திருப்பினால் திருப்தி உண்டாகும். சோதித்த மெய்யன்பினால் மனம் நிறைவு பெறும். இந்திரியங்களை இறைவனோடு தொடர்பு உடையனவாக்காமல் உலகியல் இன்பங்களில் ஈடுபடுத்துகிறவர் களுக்கு என்றுமே நிறைவு உண்டாவது இல்லை. உடம்பில் உரம் இருப்பதனால்தான் விரும்பி இன்பத்தை மிகுதியாகப் பெறு கிறான். அதனால் அவன் நிறைவு பெறுவது இல்லை. மேலும் மேலும் காமன் அவனிடத்தில் ஆசையைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறான். உடம்பு தளர்ந்து, இந்திரியங்கள் உரம் அவிந்து இருக்கும்போது முதுமை உண்டாகி அதுவே காரண மாகக் காலன் நம்மை வந்து அணுகுகிறான். காமனாலும், கால னாலும் வருகின்ற துன்பத்தை நாமே நினைந்து போக்க இயலாது. இறைவனுடைய திருவருள் இருந்தால்தான் அந்த இரண்டும் நம்மிடத்தில் வராமல் நின்றுவிடும். சிவபெருமான் காலகாலனாக இருப்பவன், காமாரியாகவும் இருக்கிறான். அவனுடைய திருவரு ளால் காமனுடைய துன்பமும், காலனுடைய துன்பமும் விலகும். சிவபெருமானினும் வேறு அல்லாத முருகவேளும் காமனால் வரும் துன்பத்தையும், காலனால் வரும் துன்பத்தையும் போக்கி 326