பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் விடுவான். அப்படிப் போக்குவதற்குரிய கருவியாகிய வேலை அவன் தன் கையில் வைத்திருக்கிறான். வேல் ஞானத் திருவுரு ஆதலின் காமத்தை அழிக்கிறது. அதுவே கால பயத்தையும் போக்குகிறது. அவனுடைய வேலை நினைத்தால் காம ஜயமும் கால ஜயமும் பண்ணலாம் என்பதை அருணகிரி நாதர் பல இடங்களில் சொல்கிறார். காலனை அறைகூவுதல் காலனால் உண்டாகும் அச்சத்தினின்றும் நீங்கி மிக்க தைரியத் தோடு இருக்கிறேன் என்று பல பெருமக்கள் பாடியிருக்கிறார்கள். இறைவனைப் பார்த்து, "உன்னுடைய திருவருளினால் நாங்கள் காலஜயம் பண்ணிவிட்டோம்' என்று பெருமிதத்தோடு கூறிய வர்களும் உண்டு. "நடலையிட் டுழிதர் கின்றோம் நமன்றமர் தலைகள் மீதே" என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்" என்று பாடுவார் அப்பர் சுவாமிகள். அருணகிரிநாதப் பெருமா னும் அதுபோலவே இறைவனைப் பார்த்தும், பொதுவாகவும் காலனால் வரும் அச்சம் தமக்கு இல்லை என்பதைத் தெரி வித்திருக்கிறார். அவற்றோடு, காலனை நேராக அழைத்து அறை கூவுகின்ற முறையில் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்படிப் பாடுவதற்கு மனத்தில் சிறந்த உறுதி வேண்டும். வெளியில் காலனைக் கண்டு அஞ்சாதவர்களைப் போலப் பேசினாலும் மனத்திற்குள் நாளைக்குச் சாவு வந்துவிடுமே என்கிற பயம் பலருக்கு இருக்கும். மரணத்திற்கு அஞ்சாமல், உயிர் என்ன வெல்லமா என்று சொல்லிக் கொண்டு இருக்கிற வன், பக்கத்து வீட்டில் குண்டுக்கல் மாதிரி இருந்தவன் இறந்து போனால் கொஞ்சம் மனம் நெகிழ்கிறான். அவனை அறியாமல் அவன் வயிற்றில் புளி கரைக்கிறது. யமனுக்குச் சிறிதும் அஞ்சா மல் அவனால் தமக்குத் துன்பம் வராது என்ற துணிவோடு இருக் கிறவர்கள் மிக அரியர். அவர்களில் மிகச் சிறந்த துணிவு கொண்டவர் அருணகிரியார். க.சொ. V-22 32了