பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அவற்றுக்கு உன்னைப் பற்றிய நினைவே இருப்பது இல்லை. அத்தகைய விலங்கினங்களை நீ கொன்று விடுகிறாயே. ஆ விலங்குகள் நினைப்பது போலத்தானே நீயும் நினைத்துக் கொண் டிருக்கிறாய்?" வேடன் சிறிதே சிந்தனை செய்தான். 'அவற்றை நான் கொல்கிறேன். அதனால் அவற்றின் உயிருக்கே இறுதி உண்டாகி விடுகிறது. அதனால் என் நினைப்பு எப்படி வீணாகும்;: என்று அந்த வேடன் கேட்டான். 'உன் வாழ்க்கை இப்படியே நீடித்துக் கொண்டிருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறாயா? உன்னுடைய பாட்டனார் எங்கே போனார்? உன் தகப்பனார் எங்கே போனார்?' என்று பெரியவர் கேட்டார். 'அவர்கள் எல்லாம் செத்துப் போனார்கள்' என்று விடை வந்தது. "அப்படியானால் நீயும் ஒரு நாள் செத்துப் போவாயே; உன் உடம்பு, உயிர் இல்லாமல் போகுமே. விலங்குகளின் உடம்பை நீ உயிர் இல்லாமல் ஆக்குவது போல உன்னை உயிர் இல்லாமல் ஆக்குவதற்கு ஒருவன் வருவானே' என்று பெரியவர் சொன்னார். அதைக் கேட்டபோது வேடனுக்கு அச்சம் உண்டாயிற்று. 'என்னை உயிர்போகும்படி செய்கிற அவன் யார்?' என்று கேட்டான். - 'அவனுக்கு யமன் என்று பெயர் அப்பா. அவன்தான் உலகிலுள்ள எல்லா உயிர்களையும் கொல்கிறான். உன் கையில் உள்ள வேலினால் நீ விலங்கைக் கொல்கிறாய்; வேல் கொல் கிறது என்று யாரும் சொல்வதில்லை; நீ கொல்கிறாய் என்றுதான் சொல்வார்கள். அதுபோல விலங்குகளை நீ கொல்வதாக நினைக் கிறாய். யமன்தான் உன் மூலமாக அவற்றைக் கொல்கிறான். அது போலவே உன்னையும் வியாதி முதலிய கருவிகளால் கொன்று விடுகிறவன் அவன்தான்.” வேடன் இப்போது சற்று யோசனை செய்ய ஆரம்பித்தான் 'நீங்கள் சொல்வது மெய்யாகத் தோன்றுகிறது. விலங்குகளை நான் கொல்வது போல என்னை நோயும் முதுமையும் கொல்லும் 330