பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வராக உருவத்தை எடுத்துக் கொண்டு அவனுக்குப் பிரத்தியட்சம் ஆனார். 'நீ யார்?' என்று வேடன் கேட்டான். 'நீ என்னை ஏன் அப்பா கூப்பிட்டாய்?" என்று திருமால் கேட்டார். வேடனோ, “நீ எதற்காக வந்தாய்?' என்று மறுபடியும் கேட்டான். - 'நீ என்னை நினைத்தாய். உனக்கு அருள் செய்ய வந்திருக் கிறேன். ' 'எனக்கு ஒன்றும் தெரியாது, உன்னிடத்தில் என்ன பேச வேண்டும் என்பதை என் குருநாதரிடத்தில் கேட்டுச் சொல் வேன். வா' என்று சொல்லி அந்தப் பன்றியைக் கட்டி இழுத்துக் கொண்டு முனிவரிடத்தில் போனான். 'சுவாமி! நீங்கள் எனக்கு உபதேசம் பண்ணினர்கள். இந்தப் பன்றி இப்போது தோன்று கின்றது. எனக்கு என்ன வேண்டுமென்று கேட்கிறது. நான் அதை என்ன கேட்கட்டும்?' என்று பணிவுடன் முனிவரைக் கேட்டான். அந்த முனிவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்களுக்குப் பன்றி தெரியவில்லை. 'எதைப் பார்த்தப்பா அப்படிச் சொல் கிறாய்? பன்றி ஏதும் தெரியவில்லையே' என்று சொன்னார். வேடன் உடனே, "அப்படியா?" என்று சொல்லி அந்தப் பன்றியை நோக்கி, "என் குருநாதர் கண்ணில் நீ தெரிய வேண்டும்' என்று கோபமாகச் சொன்னான். அடியானுக்கு அகப்பட்டவரான திருமால் அந்த முனிவருடைய கண்களின் முன் சங்குசக்கர அடை யாளத்தோடு பன்றியாக தோன்றினார். அந்தத் தோற்றத்தைக் கண்ட முனியுங்கவர் கண்ணில் நீர்வார வேடன் காலைக் கட்டிக் கொண்டு. 'அப்பா நீதான் என் குருநாதன்' என்று சொல்லிக் கதறினாராம். இந்தக் கதையில், இறைவன் எந்தச் சமயத்தில் எந்தப் புதிய உருவத்தை வேண்டுமானாலும் எடுப்பான் என்ற உண்மை புலனாகிறது. தன்னை நம்பினவர்களுக்கு - உறுதியாக மனத்தை ஒருமைப்படுத்திப் பிரார்த்தனை பண்ணுகிறவர்களுக்கு - அவன் 332