பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் அருள் செய்வான் என்ற தத்துவம் சிரஞ்சீவித் தன்மை உடையது. இன்ன வழியில் இன்ன உருவத்தோடு வருவான் என்பது அந்த அந்தக் காலத்திற்கு ஏற்றது. ஆஞ்சநேயராக வரலாம். அம்பிகை யாக வரலாம். முருகனாக வரலாம். எப்படி வந்தாலும் அன்பு உடையவருக்கு அருள் செய்வதாகிய காரியம் எந்தக் காலத்தும் தவறுவது இல்லை. உடம்பும் உயிரும் ஆகவே, சிரஞ்சீவித் தன்மை என்று சொல்வது இந்த உடம்புக்கு அன்று; உயிருக்குத்தான். உயிர் இறைவனோடு ஒன்றிப் பிறப்பும் இறப்பும் இல்லாமல் இருப்பதுவே மரணமில்லாப் பெருவாழ்வாகும். இறைவனோடு ஒன்றுபட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிற பெரியவர்கள் முத்தி அடைந்தவர்கள். அவர்களுடைய உடம்பு வாழ்வது இல்லை. உயிர்தான் வாழ்கிறது. சொந்த அநுபவம் உடம்பு அழியும் காலத்தில் நம்முடைய உயிரைக் கொண்டு போக யமன் வருகிறான் என்று புராணம் கூறுகிறது. அந்த யமனுடைய பயத்தை மாற்றுவதற்கு இறைவனுடைய திருவருள் வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். பலவகையில் சொல்லிப் பல பாடல்களை அருளி இருந்தும் நமக்கு எளிதில் இந்தப் பயம் போவதில்லை. அருணகிரிநாதருடைய திரு வாக்கில் மிக உயர்ந்த உறுதி புலப்படுகிறது. அதனைப் படிப்பத னால் காலனிடம் உள்ள அச்சம் ஒருவாறு போய்விடும் என்பதை என்னுடைய சொந்த அநுபவத்தில் கண்டேன். என்னுடைய தாய் இறந்து போகிற தருணத்தில் இருந்தாள். ஒரு மாதம் ஈளை நோயினால் துன்புற்றுக் கொண்டிருந்தாள். நிச்சயமாக இறந்து போவாள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். நாடி தளர்ந்து கொண்டு வந்தது. சம்பிரதாயத் திற்காக ஏதோ மருந்து கொடுத்தாலும் என்னுடைய மனம் அமைதி பெறவில்லை. அவளுடைய உயிருக்கு நல்ல மருந்து கொடுக்க வேண்டுமென்பது என் ஆசை. அருணகிரிநாதப் பெருமான் நமக்குத் தந்திருக்கிற அமுத சஞ்சீவினியாகிய திருப்புகழை என் னுடைய தாயின் காதில் ஒதுவது என்று தீர்மானம் செய்து 333