பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நினைத்தால் பயம் போய்விடும். திருடன் வருவது போல மனத்தில் பயம் இருந்தால், அந்தப் பயத்தை மாற்றிக் கொள்ள போலீஸ்காரன் வருவது போலவும், அவன் திருடனைப் பிடித்து அடிப்பது போலவும் எதிர்ப்பாவனை செய்ய வேண்டும். அப்போது பயம் போய்விடும். அது மாதிரியே யமன் வருவான் என்ற பயம் வரும்போது, யமனைத் தாக்கி அழிக்கின்ற முருகப் பெருமான் வருவான் என்ற பாவனை வேண்டும். அந்தப் பாவனை முறுக முறுக நம்முடைய உள்ளத்திலுள்ள அச்சம் போய்விடும். உண்மையில் யமன் வரும்போது முருகப் பெருமானும் எழுந் தருளி நம்மைக் காப்பாற்றுவான். 'யத் பாவம் தத்பவதி” என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு. காலனுடைய பயத்தைப் போக்குதற்கு ஒர் அழகான மந்திரமாக அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டை நமக்குத் தந்திருக்கிறார். பட்டிக் கடாவில் வரும்அந்த காஉனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவி டேன்வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேல்பெரு மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாள் என்றன் கையதுவே என்று அருணகிரிநாதப் பெருமான் யமனைப் பார்த்து அறை கூவும் பாட்டு இது. யமனை அந்தகா என்று விளிக்கிறார். அந்தகன் அந்தகன் என்பது குருடனுக்குப் பெயர். உயிர்களின் நிலையை உணராமல், அவர்களுடைய தாபத்தையும் அவர்களுடைய பிரிவி னால் மற்றவர்கள் அடையும் துன்பத்தையும் சிறிதும் உணராமல், இளம் குழந்தை, இளம் பெண், முதியவன் என்ற வேறுபாடு எதுவும் பாராமல் குருடனைப் போல அவன் உயிர்களைக் கொள்ளை கொள்கிறான். அதனால் அவனுக்கு அந்தகன் என்று பெயர் வந்தது. எருமைக்கடா அவன் ஏறுகின்ற எருமைக்கடாவோ பட்டிக் கடா. பட்டி என்ற சொல் யாராலும் அடக்க முடியாதது. ஒழுக்கம் இழந்தது என்பதைக் குறிக்கும். 336