பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தளரவிட்டுச் சாதனம் செய்ய வேண்டும். அதற்குரிய பெரிய மந்திரமாக இந்தப் பாட்டு நிச்சயமாக உதவும். பட்டிக் கடாவில் வரும்.அந்த கா, உனைப் பார்அறிய வெட்டிப் புறங்கண்டு அலாது விடேன்; வெய்ய சூரனைப் போய் முட்டிப் பொருதசெவ் வேல்பெரு மாள்திரு முன்புநின்றேன்; கட்டிப் புறப்பட டாசத்தி வாள்என்றன் கையதுவே. - (அடக்க முடியாத எருமைக் கடாவின்மேல் ஏறி வரும் அந்தகனே, உலகத்திலுள்ளாரெல்லாம் அறியும்படியாக உன்னை வெட்டித் தோல்வி யுறச் செய்தல்லாமல் விடமாட்டேன்; வெம்மையான இயல்பையுடைய சூரனிடம் சென்று அவனை எதிர்த்துப் போரிட்ட செம்மையான வேலை ஏந்தும் பெருமாளாகிய முருகனுடைய சந்நிதானத்தில் நின்றேன்; நீ உன் ஆயுதங்களையும் போர்க்கோலத்தையும் அணிந்து புறப்படடா அருட்சக்தி யாகிய வாள் என் கையில் இருக்கிறது. பட்டி - அடக்க முடியாதது. கடா - எருமைக்கடா. புறங்கண்டு - முதுகு கண்டு; தோல்வியுறச் செய்து, பொருத - போரிட்ட, திருமுன்பு - அழகிய முன்னிலையில்; சந்நிதியில். கட்டி - கவசம் முதலியவற்றை கட்டி, "சத்தி வாள் ஒன்றினால், சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே' என்று வேறோரிடத்தில் பாடுகிறார்.) 34O