பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் முந்திய பாட்டில் யமனை நேரே பார்ர்த்து அறைகூவிய அருணகிரியார் இப்போது ஆண்டவனை நோக்கி விண்ணப்பம் செய்து கொள்கிறார். வீரர் செயல் ஒரு பெரிய மன்னன் படையெடுத்துச் சென்று ஒரு நாட்டை முற்றுகையிட்டுப் போர் செய்து வெற்றி கொள்வதற்கு முன்பு, உறுதியாகப் போரில் வெற்றி கொள்வோம் என்ற எண்ணத்தி னால் அந்த நாட்டைத் தன்னைச் சார்ந்த ஒருவனுக்குத் தானம் பண்ணுவது வழக்கம். ராமாயணத்தில் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று வருகிறது. ராமன் கடல் கடந்து சென்று ராவணனைச் சங்காரம் பண்ணுவதற்கு முன்பு விபீடணன் அவனிடம் சரணாகதி அடைந் தான். அவனை அடைக்கலமாக ஏற்றுக்கொண்ட ராமன் அவனையே இலங்கைக்கு அரசனாக முடி சூட்டினான். இலங்கை இன்னும் ராவணன் கையில்தான் இருந்தது. அதற்கு முன்னாலே விபீடண னுக்கு முடி சூட்டுவது எப்படி நியாயமாகும் என்று தோன்றும். ராமனுக்குத் தனது வெற்றியில் உள்ள உறுதிதான் அப்படிச் செய்தது. அதனைத் தொல்காப்பியம், - 'கொள்ளார் தேயம் குறித்த கொற்றம்' என்ற துறையில் அமைத்து இலக்கணம் கூறும். உறுதி ஒருவனுடைய கையில் பணம் இல்லை. தன்னுடைய நண்பர் ஒருவரை அணுகுகிறான். 'நீ கவலைப்படாதே; நான் எக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று அவர் சொல்கிறார். ஆனால் அப்படிச் சொல்லும்போது அவர் கையில் பத்து ரூபாய் கூட இல்லை. எப்படியாவது தம்முடைய திறமையினால் ஆயிரம்