பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் வைத்துப் போற்ற வேண்டிய உள்ளத்தில் பைத்தியத்தைப் போல வெறுக்கத் தக்க பல பொருள்களைப் போட்டு நிரப்பிக் கொண் டிருக்கிறோம். அத்தகைய உள்ளம் சிறந்த பெட்டியாகாது. நம் முடைய உள்ளத்தில் இறைவன் சம்பந்தமான பொருள்களே இருந்தால் அந்த உள்ளந்தான் சிறந்த பெட்டியாக இருக்கும். நன்றாகத் திருப்புகழைப் படித்துப் பொருள் தெரிந்து அதில் ஈடுபட்டு நம்முடைய நெஞ்சத்திலே வைத்து அதைப் பாதுகாக்க வேண்டும். படிக்கும் திருப்புகழ் போற்றுவன் என்ற அடியிலே இதனைத்தான் நமக்கு அருணகிரிநாதர் உப தேசம் செய்கிறார். - காலம் போதல் மனத்தில் ஏதேனும் ஒன்று இருக்குமானால் அடிக்கடி நாம் சொல்வதற்கு அது உதவியாக இருக்கும். எத்தனையோ செய்கை களைச் செய்கிற நமக்குக் காலம் மலையாக நின்று துன்புறுத்து கிறது. காலம் போகவில்லையே என்று நினைக்கும்போது நம் உடம்பு சிரமப்படுகிறது; உள்ளம் துன்புறுகிறது. உள்ளம் துன் புறாமல் இருந்தால் காலம் போவதே தெரியாது. வேலையினால் வருகிற சிரமத்தைப் போக்கிக் கொள்வதற்குத் தொழிலாளர்கள் பாடுவதைப் போல, நம்முடைய உலக வாழ்வில் வருகிற சிரமங்களைப் போக்கிக் கொள்வற்குத் திருப்புகழ் ஆகிய பாட்டு நமக்குப் பயன்படும். படிக்கும் திருப்புகழைப் போற்றிக் கொண் டிருந்தால் காலம் போவது தெரியாது. காரியங்கள் பல செய்து கொண்டிருக்கலாம். இந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நம் வீட்டுத் தாய்மார்களைப் பார்த்தால் போதும். தாய்மார்களின் பழக்கம் அவர்கள் நாம் எழுவதற்கு முன்னே எழுந்திருந்து, சாணம் தெளித்து, வீதி பெருக்கிக் கோலம் போடுகிறார்கள். அதுமுதல் இடைவிடாமல் வீட்டு வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். நாம் எல்லோரும் படுத்துக் கொண்டு தூங்கும் வரையில் வேலை செய்கிறார்கள். எல்லோரும் தூங்கிய பிற்பாடு துரங்கச் செல் கிறார்கள். 25