பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் கொள்ள வந்ததே யொழிய, நாராயணன் என்று சொல்லும் போது இருதயத்தைத் தட்டுவதற்கு அவனுக்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை. 'இந்தப் பாவி தன் நெஞ்சைத் தட்டிக் கொண்டு, இங்கே இருக்கிறானா என்று கேட்டால் அங்கே தோன்றி ஆட்கொள்ள வேண்டும் என்று நரசிங்க மூர்த்தியே எண்ணியிருக்கலாம். நல்ல வேளையாக அவன் அப்படிச் செய்யவில்லை. எதிரே நின்ற துணையே அவன் தட்டினான். நரசிங்கமூர்த்தி அங்கே தோன்றி னார். பிரகலாதன் ஆகிய தன்னுடைய அடியானது வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டே அம்மூர்த்தி எல்லாப் பொருள்களிலும் சித்தமாக இருந்தார் என்று ஒரு வடமொழிப் பாடல் கூறுகிறது. இறைவன் மேற்கொள்ளும் பொறுப்பு இதிலிருந்து அடியார்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற் றும் பொறுப்பை இறைவனே மேற்கொள்கிறான் என்ற உண்மை புலனாகிறது. ஆண்டவன் எப்படியும் வந்து தம்மைக் காப்பாற்று வான் என்ற நம்பிக்கையில் அருணகிரியார் அந்தப் பெருமானிடத் தில் இந்த விண்ணப்பத்தைச் செய்து கொள்கிறார். 'பட்டிக் கடாவில் வரும் அந்தகா, உன்னைப் பார்அறிய வெட்டிக் புறங்கண்டலாது விடேன் என்று உலகறிய அறைகூவிவிட்டோமே. அவன் எப்படியும் ஒரு நாள் வந்துவிடுவானே. அதற்கு முன்னாலேயே நம்முடைய குறையை ஆண்டவனிடத்தில் சொல்லிப் பாதுகாப்புச் செய்து கொள்ள வேண்டுமே!’ என்று நினைத்தவரைப் போல அந்தப் பாட்டைச் சொன்னவுடனே இந்தப் பாட்டைச் சொல்கிறார். வெட்டும் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் விடும்கயிற்றால் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும்; கராசலங்கள எட்டும் குலகிரி எட்டும் விட் டோடஎட் டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே!