பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 யமனென்னும் உருவகம் முன் பாட்டில் பட்டிக் கடாவில் வரும் அந்தகா என்று சொன்னார். இந்தப் பாட்டில் வெட்டும் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் என்று சொன்னார். அவன் ஏறுகின்ற கடா வெட்டு வதற்குரியதாம். அஞ்சுவதற்கு உரியது அன்று என்ற நினைப்புடன் அவ்வாறு சொன்னார். அவன் வெம் கூற்றன்; மிகவும் கொடுமை யான இயல்பு உடையவன். எருமைக் கடாவின் மேல் வந்து அவன் பாசத்தினால் நம்மைக் கட்டுவான். உடம்பினின்றும் உயிர் போவதற்கு முன்னாலேயே உடம்பில் பல அறிகுறிகள் உண்டாகும். நரை திரை மூப்பு என்பன மரணத் திற்கு அடையாளங்கள். திடீரென்று உயிர் போவதும் உண்டு. ஆனால் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டும், முதுமை வாய்ப்பட்டும் இறப்பவர்களே மிகுதியாதலின் அவற்றை மரணத்தின் அறிகுறி களாக நாம் கொள்கிறோம். மரணம் அடைவதற்கு முன் ஒருவன் கண் நட்டுப்போகிறது; வாயிலிருந்து நுரை தள்ளுகிறது; பேச்சு வருவது இல்லை; இந்திரியங்கள் எல்லாம் வேலை செய்யாமல் நின்று விடுகின்றன. அப்போது பார்த்தால் யாரோ கயிற்றைக் கழுத்தில் முறுக்கி இழுத்தால் என்ன என்ன வேதனைகள் உண் டாகுமோ அந்த அந்த வேதனைகளைப் போலத் தோன்றுகின் றன. ஆதலால் யமன் பாசக் கயிற்றினால் கட்டி இழுக்கிறான் என்று உருவகப் படுத்திப் புராணங்கள் கூறுகின்றன. கடாவும் மயிலும் “என்னை வெங்கூற்றன் வந்து கயிற்றால் கட்டும் போது நீ விடுதலை செய்ய வேண்டும்' என்று இந்தப் பாட்டில் அருண கிரியார் விண்ணப்பம் செய்து கொள்கிறார். எருமைக் கடா வாகனத்தின் மேல் வரும் கூற்றுவனுக்கு மாற்றாகக் கலாப மயூரத்தின் மேல் வரும் இறைவனை வேண்டுகிறார். வெட்டும் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் என்ற அளவில் யமனைப்பற்றிய செய்திகளைச் சொன்ன அருண கிரியார் முருகப் பெருமானின் மயிலை மிக அழகாக வருணிக் கிறார். அது தன்னுடைய கலாபத்தை விரித்து அதன் நிழலில் 346