பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் என்கிறார். மார்க்கண்டன் கதை நமக்குத் தெரியும். அவன் உடம்பில் இருந்து உயிரைக் கூறுபோடக் கூற்றுவன் தன் எருமைக்கடா வாகனத்தில் வந்தான்; பாசக் கயிற்றோடு வந்தான். அந்தக் கயிற்றை வீசி மார்க்கண்டனை இழுக்கும்போது சிவ பெருமான் அஞ்சேல் என்று தோன்றினான். யமனுடைய வாகனம் ஒருபுறம் விழ, சூலம் ஒருபுறம் விழ, பாசக் கயிற்றை அறுத்து எறிந்து, அவனை உதைத்துக் கொண்டே எழுந்தான் பெருமான். மார்க்கண்டேயன் உயிரைப் போக்க வந்தவனுடைய உயிரே போய்விட்டது. இறைவனுடைய புகழைப் போற்றி, அவனை இரு கரங்களாலும் அணைத்துக் கொண்ட மார்க்கண்டேயனைப் போல, நாமும் திருப்புகழைப் படித்து அதனைப் போற்றி அதன் கருத்துக்குள்ளே நனைந்து அதன் பயனாக எம்பெருமாளை இருதயத்திற்குள் அணைத்துக் கொண்டுவிட்டால் நாமும் காலனை வென்றுவிடலாம். இடைவிடாத பயிற்சி ஆனால் அதற்குத் தொடர்ந்து சாதகம் செய்ய வேண்டும். ஒருநாளில் நிகழ்கிற காரியம் அன்று இது. இறைவன் திருப் புகழைப் படித்துப் படித்து மனனம் செய்து, பாராயணம் பண்ணி, தியானம் செய்து பழகினால் நிச்சயம் அதன் பயன் கிடைக்கும். இப்பொழுது தினந்தோறும் செய்கிற காரியங்களோடு, அதையும் விடாமல் செய்ய வேண்டும். காலன் வரும்போது திருப்புகழ் கற்கலாமே என்று எண்ணிப் பயன் இல்லை. பரீட்சை வரும் போது படித்து அப்படியே கக்கிவிடலாம் என்று சொல்லும் மாணவர்களின் எண்ணம் போன்றது அந்த எண்ணம். சொல்லை ஒலியாகத் தெரிந்து கொண்டு, பின்பு அதன் பொருளையும் தெரிந்து கொண்டு, அப்பால் அதிலுள்ள உணர்ச்சியையும் உணர்ந்து அந்த வழியில் நிற்பதற்குப் பலகாலப் பழக்கம் வேண்டும். உலகத்தில் ஏதேனும் ஒரு சாலை அமையவேண்டுமானால் அதற்குப் பலகாலம் முயற்சி செய்கிறார்கள். நம் மனத்தில் திருப் புகழ்ச் சாலை போடுவதற்குப் பலகாலப் பழக்கம் வேண்டும். முதலில் சொல்லாலே போட்டு, பின்பு பொருளாலே போட்டு, 29