பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் 1 அருணகிரி நாதர் இறைவனிடம் பக்தி செய்யவேண்டுமென்று சொல்வதோடு அற உபதேசங்களையும் சில சமயங்களில் சொல் வார். இப்போது இந்தப் பாடலில் அறத்தைப் பற்றிய நினைவை நமக்கு உண்டாக்குகிறார். அறத்தின் தலைமை அறம் எல்லோரும் செய்வதற்குரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாகும். அறத்தினின்றும் வழுவிய பொருள் பொருளாகாது. அப்படியே இன்பம் அறத்தோடு பொருந்தி வரவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்ப மாகாது. ஆகவே அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் ஜீவனைப் போல இருப்பது. அறம் என்பது நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரி விப்பது. விதி, விலக்கு என்று சொல்வார்கள். கடமை, கடன், ஒழுக்கம், ஆசாரம் என்று சொல்லப்படுவன எல்லாமே அறம். அறத்தின் வகை அறம் என்பதற்குப் பகுதி அறு. இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடா தென்று வரையறுப்பதும் அதுவே. நம்முடைய ஆமைகளை எல்லாம் வேதம் முதலிய நூல்களும் பெரியவர்களும் வரையறுத் திருக்கிறார்கள். அப்படி வரையறுத்த நெறியே அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்று அந்த அறம்