பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மூன்று வகைப்படும் என்ற சொல்வார்கள். இந்த மூன்றிலும் மிகவும் முக்கியமானது ஒழுக்கம். செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் தம் நூலில் சொல்லி இருக்கிறார். அறத்துப்பால் என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரத்தில் அறத்தின் பகுதிகளை முறையாகச் சொல்கிறார். மனிதன் வாழும்போது எவற்றைச் செய்யவேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது என்று வரையறையாகச் சொல்லி யிருக்கிறார். எல்லாவற்றுக்கும் ஜீவனைப் போல இருப்பது ஈகை, எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. இது எப்படித் தெரிகிறது என்பதைச் சற்றுப் பார்க்கலாம். ஒளவையின் சுருக்கப் பேச்சு ஒரு சமயத்தில் ஒளவைப் பாட்டியைச் சில புலவர்கள் வணங்கி, 'பாட்டி, நூல்கள் யாவும் தர்மார்த்த காம மோrம் என்ற நான்கையும் சொல்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். நீங்கள் சுருக்கிச் சொல் வதில் வல்லவர்கள் அல்லவா?" என்று கேட்டார்கள். பாட்டி சுருக்கமான எதையும் சொல்வதில் வல்லவள். பெருக்க மாகவும் சொல்வாள். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்ப மாக இருக்கவேண்டுமென்பது இல்லை. சுருக்கிச் சொல்வத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக்கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும் அல்லவா? 'வரப்புயர' சோழனுக்கு முடிசூட்டு வைபவம் நடந்தது. பெரிய புலவர்கள் எல்லாம் - ஒளவைப் பாட்டியும்கூட - வந்திருந் தார்கள். சோழனை வாழ்த்தி அப்புலவர்கள் பல பாட்டுக்களை எழுதி வந்திருந்தார்கள். ஆனால் ஒளவைப்பாட்டி எதையும் எழுதி வரவில்லை. எப்படியும் அவள் வாழ்த்துவாள் என்று யாவரும் எதிர்பார்த்தார்கள். நினைத்தால் வேகமாகப் பாடக்கூடிய வன்மை உடையவள். ஆகையால் திடீரென்று பல பாடல்களைப் 38