பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் என்பது குறுந்தொகையில் வரும் பாட்டு. சிவபெருமானே பாடிய தாகச் சொல்லும் பாட்டு ஒன்று குறுந்தொகையில் உண்டு. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல் செறிஎயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே” என்பதில், 'பயிலியது கெழீஇய நட்பு என்று காதலை அவர் சொல்கிறார். பயிலியது கெழிஇய நட்பு - பிறவிதோறும் இணைந்து பழகிய அன்பு. ஆகவே பிறவிதோறும் வருகின்ற காதல் காரணமாகத் திருவருள் கூட்டிவைக்க ஒருவனும் ஒருத்தியும் கண்டு இந்தப் பிறவியில் தொடர்பு கொள்கிறார்கள். யாரிடமும் காதல் கொள்ளாத ஒருவன், எத்தனையோ மகளிர்களைக் கண்டாலும் அவர்கள் அழகிகளாக இருந்தாலும், அவர்களிடத்தில் அவன் உள்ளம் செல்வது இல்லை. பிறவிதோறும் தொடர்ந்து வந்த தொடர்பு உடையவள் ஒருத்தியிடம் மாத்திரம் அவன் மனம் செல்லுகிறது. அந்த ஒருத்தி வரும்போது இந்தப் பிறவியில் பழக்கம் இல்லாவிட்டாலும் உயிரோடு ஒட்டிய தொடர்பு இவன் அவளைப் பார்க்கச் செய்கிறது. அவள் இவனைப் பார்க்கிறாள். இரண்டு பேர்களுடைய உள்ளமும் ஒன்றுபடுகின்றன. அவள் இவனுக்காகவே இந்தப் பிறவியில் பிறந்து காத்துக் கொண்டிருக் கிறாள். இவனும் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். இரண்டுபேரும் முன்னைத் தொடர்பு காரணமாகத் தம்மை அறியாமல் ஒருவருக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பக்குவத்தினால் கண்டவுடனேயே அவர்கள் ஒன்று படுகின்றனர். உயிருக்கும் உயிருக்கும் உள்ள காதல் இது. 1. பூந்தாதைத் தேரும் வாழ்க்கையையுடைய அழகிய சிறகையுடைய தும்பியே, என்னிடமுள்ள நட்பை எண்ணி அதற்கேற்றபடி சொல்லாமல் நீ உணர்ந்ததைச் சொல், பல பிறவிகளிலும் பயின்று பொருந்திய நட்பையும், மயிலின் மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய என் காதலியின் கூந்தலைப் போல நீ அறியும் மலர்களில் மணம் உடையவையும் உண்டா? 43