பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் மக்கள் பசியினால் பிள்ளையை விற்றுப் பிழைக்கிறார்கள். சண்டைக் காலத்தில் ரங்கூன் முதலிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குப் பிள்ளை குட்டியோடு நடந்து வந்தார்கள் நடுவில் சோறு கிடைக்காமல பட்டினியால் வாடித் துவண்டபோது, குழந்தை களை எறிந்துவிட்டு வந்தார்கள். இது உண்மையான செய்தி. தாய்மார்களே தங்கள் பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடி வந்தார்கள். பசி தாய் அன்பையும் நசிக்கச் செய்துவிட்டது. ஊருக்கு வந்த பிறகு, "இப்படிச் செய்து வந்தேனே' என்று அரற்றிக் கொண் டிருந்தார்கள். ஆனால் அப்போது இந்த நினைவு வரவில்லை. சாமானிய மக்கள்தாம் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணக் கூடாது, மிக்க தவம் புரிந்தவர் ஆகிய விசுவாமித்திரர் தியானத் தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பசி வந்துவிட்டது. அவருக்குப் பிச்சை போடுவார் யாரும் இல்லை. நாயின் ஊனைத் தின்றாராம். மற்றொரு சமயமாக இருந்தால் அப்படிச் செய்வாரா? பசிநோய் முறுகி நிற்க, அதனை மாற்றுவதற்கு வழி இல்லாமையினால் அவ்வாறு செய்தார். தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்' என்று பாடினார் வள்ளுவர். மணிமேகலை ஆசிரியர் பசியை, 'பசிப்பிணி என்னும் பாவி' என்று கூறுகிறார். 'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே' என்றும் அன்னதானத்தின் சிறப்பைச் சொல்கிறார். மணிமேகலை மணிமேகலை என்னும் பிட்சுணி தவம் செய்ததாக மணி மேகலை என்னும் காவியம் சொல்கிறது. அவள் செய்த மற்றத் 47