பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் சிங்காதனத்தை அநுமன் தாங்கினான். அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். லட்சுமணனும் சத்துருக்னனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமன் அருகில் அமர்ந் திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் புலவர். "விரைசெறி குழலி ஓங்க வெண்ணெய்மன் சடையன் கங்கை மரபுளோர் கொடுக்க வாங்கி." இராமசந்திர மூர்த்திக்கு வசிட்டன் திருமுடியைச் சூட்டி னான் என்கிறார். அந்த மகுடத்தை சடையப்பருக்கு முன்னோ ராகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார். ஒருவகையில் ராமனுக்கு முடிசூட்டும்போது கம்பர் சடையப்ப வள்ளலுக்கும் புகழ் முடி சூட்டிவிட்டார் என்று சொல்லவேண்டும். அப்படி இராமபட்டாபிஷேகத்தில் சடையப்பருடைய பட்டாபி ஷேகத்தையும் வைத்துக் கொண்ட கம்பருடை அன்புக்கு மூல காரணம் அவ்வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 2 அநுபவ பூர்வமான முறை 'என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லையே! எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அநுபவபூர்வமான முறையில் ஒரு தந்திரத்தைச் சொல்லித் தருகிறார் அருணகிரிநாத சுவாமிகள். அந்த வழியை விளக்குகிற அலங்காரப் பாட்டை இப்போது பார்க்கப் போகிறோம். மலைஆறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கி அன்பின் நிலையான மாதவம் செய்குமி னோ; நூம்மை நேடிவரும் 53