பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும்கண்டீர்; இலை.ஆயினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. 'நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகி விடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறதே, அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு பொதி சோறாகி, கட்டுச் சோறாகி, வந்து சேரும்' என்று அவர் சொல்கிறார். அருணகிரி நாதருக்கு நம்முடைய நிலைமை தெரியாதா? முன்பே, 'நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்' என்று சொன்னார். இப்போது மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள வர்களுக்கும் அறம் செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்ற உபதேசம் செய்கிறார். இலை ஆயினும் வெந்தது ஏது ஆயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே. 'நல்ல நல்ல பதார்த்தங்களோடு விருந்து படைக்க வேண்டும். அதுதான் சிறந்தது' என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வதற்குப் பணம் வேண்டுமென்பது உண்மை. 'காய்கறி களோடு என் வீட்டில் சமைக்கவில்லை. என் வீட்டில் அரிசிச் சாப்பாடே இல்லை' என்று சிலர் சொல்லக்கூடும். அவர்கள் வீட்டில் கீரையையாவது சுண்டிச் சாப்பிடுவார்கள். புறநானூறு முதலிய சங்க நூல்களில் வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள் என்று புலவர்கள் வருணித் திருக்கிறார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்று சொல்கிறார். அது முழுவதையும் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை, இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து. 54