பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் 'பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்' என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். இப்படிப் பகுத்து உண்ணும் உணவைப் பாத்தூண் என்பர் திருவள்ளுவர். 'ஐயா, நான் ஏதோ கீரையைச் சுண்டிச் சாப்பிடுகிறேன். என்னிடம் பெரிய துறவி வந்து கேட்டால் அந்தக் கீரையை இதுதான் இருக்கிறதென்று கொடுக்கலாமா?' என்று நாம் கேட்கலாம். 'நீ கொடுக்கிற பொருளில் உயர்வு தாழ்வு இல்லை. பிறருக்குக் கொடுக்கவேண்டுமென்று நினைக்கிற நினைப்பில் தான் உயர்வு இருக்கிறது. நீ அதைப் பகிர்ந்து கொடு' என்று அவர் சொல்கிறார். மனத்தோடு செய்தல் எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அதைத் தக்கபடி செய்ய வேண்டும்; மனத்தோடு செய்யவேண்டும். 'எனக்கு ஆயிரம் ரூபாய் வந்தால் அநாதை விடுதிக்குக் கொடுத்து விடுவேன்' என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் பணம் வரும் போது அந்த எண்ணம் மறைந்துவிடும். அது இல்லையே, இது இல்லையே கொடுக்க என்று நினைத்துக் கொண்டிருப்பதைவிட நினைக்கும் போதே கையில் எது இருக்கிறதோ அதைக் கொடுத்து விட வேண்டும். இப்புறம் கொடுக்கலாம் என்று நினைத்தால், இடையில் எத்தனையோ மாயா சக்திகள் வந்து அந்த நினைப்பை மறைத்து விடும். இறந்து போன ஒருவரை எண்ணி, "ஐயோ போய்விட்டாரே' அழுகிறவர்களைவிட, 'எனக்கு அதைக் கொடுக்கிறேன் என்றாரே. அதற்குள் போய்விட்டது!’ என்று என்று அழுகிறவர்கள்தாம் அதிகம். ஆண்டவனுடைய திருவருளை நாடி இருப்பவர்கள் எதை எதை எவ்வெப்போது யார் யாருக்குக் கொடுக்கவேண்டு மென்று நினைக்கிறார்களோ அப்போதே கொடுத்து விடுவார்கள். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து, 'நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன்’ என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும் வெறும் கீரையாக இருந் க.சொ. V-5 55