பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் உபதேசம் செய்கிறார். அப்படிச் செய்தால் என்ன பயன் உண்டாகும்? தொலையா வழி நூம்மை நேடிவரும் தொலையா வழிக்குப் பொதி சோறும், உற்ற துணையும் கண்டீர். 'நீ கொடுக்கிற சிறு சோறு பின்பு பொதி சோறாக விளையும்' என்று அவர் பாடுகிறார். நான் எந்த ஊருக்குமே போனது இல்லை என்று சொல்கிறவர்களும் கடைசியில் தொலையா நெடுவழிப் பிரயாணம் ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு முடிவே கிடையாது. இந்த உடம்பு முடிந்தாலும் வேறு உடம்பு தயாராக இருக்கும். கொல்லை வழியாக வீட்டைவிட்டுப் போய்விடலாமே என்று நினைக்கிறவர்கள் அந்தக் கொல்லையே அடுத்த வீட்டின் வாசலாக இருப்பதைக் கண்டு ஏமாறுவார்கள். இது போன்றதுதான் மரணம். 'இந்த உடம்பு போய்விட்டது. இனிக் கவலை இல்லை' என்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. அதைக் கடைவழி என்று முன்பு சொன்னார். இப்போது செய்கிற நிலையான மாதவந்தான் அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், துணையாகவும் வந்து சேரும். இந்த நிலையான மாதவத்தை எப்படிச் செய்யவேண்டு மென்பதை நுட்பமாக அருணகிரிநாதர் தெரிவிக்கிறார். அன்போடு அறம் செய்தல் அறிவை மழுங்க அடிக்கிற பசியை, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால் அதுவே தவமாகிவிடும். பிறருடைய பசியைப் போக்கும்போது நம்முடைய மனத்தில் ஒரு தகுதி வேண்டும். பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர் களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற் 57