பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். “அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது?’ என்ற பொறாமை யினால் சிலர் செய்யக்கூடும். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் அடித்துப் பிடுங்கிக் கொண்டு போய்விடப் போகிறார்களே என்று செய்கிறார்கள். வருமான வரிக்குப் பயந்து போனஸ் கொடுப்பது போல அவர்கள் தானம் இருக்கிறது. இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. 'அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்' என்று வள்ளுவர் சொல்கிறார். பொறாமை, ஆசை, கோபம், கடுமையான சொல் இவற்றில் ஒன்றும் இல்லாமல் செய்கிற தர்மமே தர்மம் என்பது அவர் கருத்து. இறைவனை நினைத்துச் செய்தல் உண்டுவிட்டு வீதித் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொள் கிறோம். 'ஐயா பசிக்கிறதே!' என்று கால் கொப்புளிக்கும் வெயிலில் ஒருவன் வந்து நிற்கிறான். அப்போது நாம் எதை நினைக்க வேண்டும்? 'இவனை இப்படி வீதி வீதியாகப் பிச்சை கேட்க வைத்தவன் யார்? இவனைப் போல மனிதனாகப் பிறந்த நாம் சற்றும் சிரமம் இல்லாமல் சோறு புசிக்கும்படியாகச் செய்கிறவன் யார்?’ என்று யோசிக்க வேண்டும். நம்மிடத்தில் சோற்றையும், அவனிடத்தில் பசியையும் கொடுத்தவன் நம்மிடத் தில் பசியையும் அவனிடத்தில் சோற்றையும் கொடுத்திருந்தால் என்ன ஆகும்?' என்று ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்தால் நம்முன் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிறவனை இழிவாக நாம் கருதுவோமா? நம்மிடம் சோற்றைக் கொடுத்து வைத்திருக்கும் ஆண்டவனே அவனிடத்தில் பசியைக் கொடுத்து நம்மிடத்தில் கேட்கும் படியாகச் செய்திருக்கிறான் என்று நினைத்தால், அப்போது, "ஆண்டவனே, உன் கட்டளையை உணர்ந்துகொண் டேன்' என்று கசிந்த உள்ளத்தோடு சோற்றைக் கொடுக்கத் தோன்றும். அத்தகைய நினைப்போடு அறம் செய்தால் அழுக் 58