பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும்கண்டீர்; இலை.ஆயினும்வெந்த தேதாயி னும்பகிர்ந் தேற்றவர்க்கே. (கிரெளஞ்சமலை ஆறு துண்டுகளாகப் போக வேலை ஏவிய முருகனை வணங்கி, அன்போடு கீரையானாலும் வெந்த உணவுப் பொருள் ஏதானாலும் இரந்தவர்களுக்கு ஒரு பகுதி அளித்துப் பெரிய தவத்தைச் செய்யுங்கள்; அப்படிச் செய்வதனால் உண்டாகும் புண்ணியம், உம்மைத் தேடிப் பின்னாலே வர இருக்கும் நீண்ட வழிக்குக் கட்டுச்சோறும் நெருங்கிய துணையும் ஆகும்; இதை உணருங்கள். கூறு - துண்டு. வாங்கினான் - பிரயோகம் செய்தான். ஏற்றவர்க்குப் பகிர்ந்து மாதவம் செய்குமின் என்று கூட்டுக. அன்பின் - அன்போடு. செய்குமினோ, ஒ, அசை. நேடி - தேடி. தொலையாவழி - கடக்கக் கடக்க மாளாத நெடுவழி. பகிர்ந்து - யாசிப்பவர்க்கும் ஒரு கூறு பங்கிட்டு. ஏற்றவர்க்கு - இரப்பவருக்கு.) 61