பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் சைவ நெறியிலே நின்ற அருணை முனிவருக்கு எப்படிச் சைவம் அல்லாத பிற சமயங்களிலே வெறுப்பு இல்லையோ, அப்படியே நல்ல தமிழிலே அவருக்குள்ள ஆர்வம் பிறமொழியிலே வெறுப்பை விளைவிக்கவில்லை. சாதியிலோ, சமயத்திலோ, மொழியிலோ வேறுபாடு காணாதது, அவரது சமரசத்தன்மை நிரம்பிய துய உள்ளம். நாம் முன்பு பார்த்த, "மரணப்ர மாதம் நமக்கில்லை யாம்என்றும் வாய்த்ததுணை கிரணக் கலாவியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள சரணப் ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரண க்ரு பாகர ஞான கரசுர பாஸ்கரனே!" என்ற பாடலிலே முன் இரண்டடிகளில் தமிழும் வடமொழியும் கலந்து இருக்கின்றன. பின் இரண்டடிகளில் வட மொழித் தொகைச் சொற்கள் மிகுதி. தொகைச் சொல்லைக் சமாசபதம் என்று வடமொழியில் சொல்வர். '"சமஸ்கிருதப் பாடல்களில் கூட இவ்வளவு தொகைச் சொற்களைச் சேர்த்துச் சொல்லி இருக்கமாட்டார்களே தமிழ்ப்பாட்டில் இப்படி வடமொழியைக் கலப்பது முறையா? இது தகுமா? இது தருமந்தானா?” என்று கேள்வி எழுகின்ற காலம் இது. எனக்குத் தமிழ்தான் வேண்டும் என்று சொல்கிற மக்கள் இருக்கிறார்கள். அதுவும் இன்று பார்க்கப் போகிற பாடலை முருகக் கடவுளே எதிரில் வந்து நின்று, 'இது என்னுடைய அன்பன் அருணகிரி எழுதிய பாட்டு. அன்பினாலே சொன்ன பாட்டாகையினாலே எனக்கு மிகவும் உகந்தது' என்று சொன்னாலுங்கூட, 'இந்தப் பாட்டை நான் பாடமாட்டேன்! இது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ப் பெருமக்கள் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். அரசியல் உலகத்தில் பலவித மான வெறி இருப்பது போலவே மொழியின் திறத்திலும் வெறி தலைதூக்கி நிற்கிற காலம் இது. : ஒரே பண்பாடு இந்திய நாடு முழுவதும் ஒரே ஒரு பண்பாட்டில் திளைக் கிறது என்பதைச் சில அரசியல்வாதிகள் ஒப்புக் கொள்வதில்லை. தமிழன் என்பது ஒரு தனி இனம் என்றும், அவனுக்கோர் தனிப் பண்பாடு உண்டென்றும் சொல்வார்கள். ஒரு பண்பாட்டைப் 63