பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பின்பற்றும் தன்மையிலே சில வேறுபாடுகள் இருக்கலாம். இமயம் முதல் குமரி வரையிலும் ஒரு பண்பாடு விரவிக் கிடக்கிறது என்பதை நம் நாட்டு நூல்கள் மாத்திரம் அல்ல. பிறமொழி நூல்களும் சொல்கின்றன. - - அதோடு மட்டுமன்று: சைவர்களாகிய தமிழ்நாட்டு அன்பர்கள் தொழுகின்ற சிவபெருமானே கைலாசத்தில் வாசம் செய்கிறதாக நம்புகிறோம். தட்சிண கைலாசம் தென்னாட்டில் இருக்கிறதென்று சொல்வார்களே தவிர, இயற்கையான கைலாசம் இங்கு இருக் கிறதென்று யாரும் சொல்வது இல்லை; அது இமாசலத்தில் இருக்கிறதென்றே ஒப்புக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து இமயமலைச் சாரலில் உள்ள கைலாசத் திற்கு நாம் போகிறோம்; வடக்கே உள்ளவர்கள் நம் நாட்டிலுள்ள கன்யாகுமரியை நாடி வருகிறார்கள். இப்படி இமயத்திற்கும் குமரிக்கும் ஒரு தொடர்பு இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிற மக்களுக் கிடையே உணவு, உடை ஆகாரம் ஆகியவற்றில் வேறுபாடு இருந்தாலும், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உயிருக்குப் பயன்படுகிற செய்தி களில் பாரத நாட்டிலுள்ள எல்லா மக்களும் ஒரே விதமான கொள்கையை உடையவர்கள். இந்தப் பண் பாட்டில் வேற்றுமை இல்லை. மொழியினாலே நாம் தமிழர்கள் என்றால், பண்பாட்டை ஒட்டி இந்தியர்களாகவும் அன்பினாலே உலகத்திலுள்ளவர்களுக்கு எல்லாம் சகோதரர்களாகவும் இறைவனுடைய குழந்தைகளாகவும் விளங்குகிறோம். 'அப்படியானால் நம்முடைய தமிழைக் காப்பாற்ற வேண் டாமா?' என்று ஒரு கேள்வி எழும். காலை நன்றாகக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கோ, உடம்பிலுள்ள உறுப்பு களிலேயே உத்தமாங்கம் என்று சொல்லப்படுகிற தலையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கோ, காலுக்கும் தலைக்கும் தனித் தனியாக உணவு ஊட்டுகிறோமா? தலையிலே வலி வந்தாலும், காலிலே குடைச்சல் எடுத்தாலும் உள்ளுக்கு மருந்து சாப்பிடுகிறோம். அப்படித் தமிழர்களுடைய பண்பு குலையாமல் இருக்க வேண்டு 1. இக்கருத்தை இமயமும் குமரியும் என்ற கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறேன். 64