பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் மென்றால், தெலுங்கர்களுடைய பண்பு குறையாமல் இருக்க வேண்டுமென்றால், வங்காளிகளுடைய பண்பு குறையாமல் இருக்க வேண்டுமென்றால் இமயமுதல் குமரி வரையிலும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிற இந்தியப் பண்பாடு குறையாமல் இருக்கப் பாடுபடவேண்டும். வடமொழியும் தமிழும் பொதுவாக இந்திய பண்பாட்டின் வளர்ச்சியில் தமிழும் வடமொழியும் சேர்ந்து கைகோத்துக் கொண்டு நடனம் ஆடிய நாடு இது. பக்தர்கள் எல்லாம், 'முருகா, ஷண்முகா' என்று ஆண்டவனுடைய நினைவிலே மனம் ஒன்றித் துதித்தார்கள். 'முருகா என்பது தென்மொழி; ஆகவே அது இருக்கட்டும். ஷண்முகா என்பது வடமொழி; அது நமக்கு வேண்டாம்” என்று மொழி ஆராய்ச்சி செய்து பார்த்து வெறுத்தார்கள் இல்லை. இறைவனைத் துதிக்கும்போது தோத்திரத்திலே உள்ள சொற்களில், 'இது வடசொல், நமக்கு வேண்டாம்; இது தமிழ், இருக்கட்டும்' என்றெல்லாம் பார்த்தால் இறைவன் திருவருள் கிடைக்காது. உயிர் ஆண்டவனோடு தொடர்புடையது; மொழி நிச்சயமாக நாக்காகிய கரணம் ஒன்றோடு தொடர்புடையது. இந்திரியங்களினால் நுகர்வதற்கு அப்பாற்பட்டவனாயும், மொழிக்கும் அப்பாற்பட்ட வனாயும் இருக்கிறவன் எம்பெருமான். நாக்குடனே தொடர் புடைய மொழியை மட்டும் பற்றிக் கொண்டவர் இறைவனோடு தொடர்புடைய உயிரின் பற்றை அறுத்துக் கொண்டவர்களாகிறார்கள். பாரத நாட்டு மக்களிடையே வழங்கும் மொழி எண்ணற்றன என்றாலும் இலக்கண இலக்கியச் செறிவு இல்லாதவற்றை விலக்கிச் செப்பும் மொழி பதினெட்டு என்று குறித்தார்கள். அந்தப் பதினெட்டிலும் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டுமே தலைமையானவை. வடக்கே வழங்கிய மொழி வடமொழியா யிற்று. தெற்கே பேசப்பட்ட மொழி தென்மொழி ஆயிற்று. வட நாட்டில் உள்ளவர்கள் பிராகிரத மொழி பேசினார்கள். பிராகிரதம் என்றால் இயற்கை. பிராகிருத மொழி சுத்தமாகத் தெரிந்தெடுக்கப் படாத, இயற்கையான மொழி: பேச்சில் வழங்கும் மொழி. தமிழிலும்கூடப் பேச்சுத் தமிழ் வேறு, எழுத்துத் தமிழ் வேறு. எழுதுவது செந்தமிழ்: பேசுவது கொடுந்தமிழ். சுத்தமாக 65