பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தெரிந்து வடமொழியிலேயே காவியங்கள் இயற்றிய புலவர்களும் உண்டு. மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதத்திற்குப் பாஷ்யம் எழுதியவர் சிவஞான முனிவர். வடமொழி தென்மொழி இரண் டையும் கரைகண்டு உணர்ந்தவர் அவர். ஆகவே வடமொழி என்பது இந்திய நாட்டிலுள்ள ஏதோ ஒரு பகுதியினருக்கு மட்டுந்தான் சொந்தம் என்று நினைப்பது தவறு. இமயம் முதல் குமரிவரையிலுள்ள எல்லோருக்கும் சொந்தமானது அது. ஆகையினால் அம்மொழி ஓர் ஒழுங்கோடு இருக்கவேண்டும். அதற்காகப் பேச்சிலே இருந்த பிராகிருத மொழிச் சொற்களைப் பொறுக்கி எடுத்து ஒழுங்குப்படுத்தி அமைத்ததுதான் சம்ஸ்கிருதம், உபதேச மந்திரங்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. பிராமணர்கள் அல்லாத தீட்சை பெற்ற தென்னாட்டுச் சைவர்கள் பலர் சுத்தமான சமஸ்கிருதத் திலேயே இன்னும் பல சட்ங்குகளைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிற்பிகளும் சைவர்களின் குருக்களும் வடமொழிப் பயிற்சி உடையவர்களாக இருக்கிறார்கள். ஆரியத்திற்குச் சமமான மொழி தமிழ். இரண்டும் ஒப்ப நோக்கத் தக்கனவே தவிர ஒன்றுக்கு ஒன்று உயர்வு தாழ்வு என்று காண்பது தவறு. . குமரகுருபரர் மீனாட்சி அம்மையைப் பாடுகிறார். "அருமை யாகத் தொடுக்கப்பட்ட தெய்வத் தன்மை வாய்ந்தது. வடமொழி வேதம். அந்த வேதத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் பயனாக இருக்கிற பெருமாட்டி மீனாட்சி' என்கிறார். 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!" அதுமாத்திரமா? வேதத்தைப் பெற்ற வடமொழியைப் போலவே சிறந்து நின்று பழுத்த மொழி தமிழ். தமிழ் பேசினால் அது நாக்கிலே சுவைக்கும். தமிழிலே பல துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையும் இனிமையானது, தேன் கசியும் சுவையை உடையது. அத்தகைய துறைகளையுடைய தமிழில் ஒழுகுகின்ற இனிய சுவையாக இருக்கிறான் அங்கயற்கண்ணி. நறைபழுத்த' چي لاعبير g துறைத்திந் தமிழின் ஒழுகுநறுஞ் சுவையே!” 68