பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நாவில் இருந்து வெளிப்பட்ட நான்மறையின் ஒலி கேட்டு விழித் தெழுவோம்' என்றார். - 'பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாஅதெம் பேரூர் துயிலே." மதுரை மாநகரத்தில் வேத வல்லுநர்கள் பாட, அந்த ஒலியைக் கேட்டு மற்றவர்கள் எழுந்திருப்பார்களாம். 'சேர மன்னர் தலை நகராகிய வஞ்சியிலும் சோழர் தலைநகராகிய உறையூரிலும் உள்ள மக்கள் கோழியின் குரலைக் கேட்டு எழுவது போல நாங்கள் எழுவதில்லை' என்கிறார் புலவர். அக்காலத்தில் தமிழின் தலைநகரில் வடமொழி மறைக்கு எத்தனை மதிப்பு இருந்ததென்பதை இது புலப்படுத்தும். "வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று நம் காலத்துப் புலவ ராகிய பாரதியாரும் பாடியிருக்கிறார். சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்று சீர்தூக்கிப் பார்த்து ஒன்றை விலக்க முடியுமா? பரமேசுவரன் வடமொழி என்றால் பராசக்தி தமிழ். 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். வடமொழியில் வெறுப்பில் லாமல் தமிழ் மொழியை வளர்த்தவர்கள் தமிழர். வடசொல் தொல்காப்பியத்தில் செய்யுட்குரிய சொற்களை இயற் சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நான்காகப் பிரித்து இலக்கணம் வகுத்தார். வடசொல் என்றால் என்ன? ராம: என்றால் சம்ஸ்கிருதம் அல்லது ஆரியம்; அதுவே ராமன் என்று வந்துவிட்டால் வட சொல் ஆகிறது. தெற்கே இருக்கிறவன் வடக்கிலிருந்து வருபவனைப் பார்த்து வடக்கத்தியான் என்கிறான். சம்ஸ்கிருதச் சொல் அப்படியே இருந்தால் சம்ஸ்கிருதம்; அல்லது ஆரியச் சொல்; தமிழில் வந்து 70