பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் புகுந்தால் வட சொல். வடசொற்களைத் தேவார திருவாசக திவ்யப் பிரபந்த ஆசிரியர்கள் எல்லாம் மிகுதியாக ஆண்டிருக்கிறார்கள். 2 அருணகிரியார் ஆர்வம் சாதி, சமயம், மொழி ஆகிய எல்லாவற்றிலும் தெள்ளத் தெளியத் தமது சமரச மனோபாவத்தைக் காட்டும் அருணகிரிநாத சுவாமிகள் தமிழில் வல்லவர் என்பது மட்டுமன்றி வட மொழி யிலும் நல்ல புலமை படைத்தவர். அதற்குச் சான்று இந்தப் பாட்டு. வடமொழியையும் தமிழையும் இணைத்து அவர் பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாட்டின் முதல் இரண்டடிகளில் ஆண்டவனிடத்தில், ஆண்டவனே நான் வேண்டுமென்று ஒன்றைக் கேட்கிறேன்; அதை எனக்கு நீ வழங்குவாயாக' என்று விண்ணபித்துக் கொள்கிறார். அவர் கேட்பது எது? ஆர்வம் ஈ! 'ஆர்வத்தை, விருப்பத்தை, கொடுப்பாயாக. விருப்பம் எதிலே வரவேண்டும்? நாம் செல்வத்தில், வீட்டில், மனையாட்டியிடத் தில் ஆர்வத்தை வைப்போம். அருணை முனிவர் அவற்றிலே விருப்பம் வைப்பாரா? அவர் எதை விரும்பி யாசிக்கிறார்? 'ஆண்டவனே, உன்னுடைய புகழை நேர்முகமாகச் சொல்வ தற்கு இன்னும் எத்தனையோ பக்குவம் உயர வேண்டும். பக்கத்து வீட்டிலுள்ள பெரிய பணக்காரரோடு நட்புப் பூண்பதற்கு, முதலில் அவன் வீட்டு வேலைக்காரனைச் சிநேகம் பிடிக்க வேண்டியிருக்கிறது. உன்னோடு நான் நேராகத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற தகுதி எனக்கு வரவேண்டாமா? உன்னுடைய புகழுக்கு அணிகளாக இருக்கிற வேலையும், செஞ் சேவலையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் புகழ்கின்ற பாட்டுப் பாட வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. அதுவும் செந்தமிழால் பாட வேண்டும். சேவலையும் வேலையும் செந்தமிழால் பாடுகின்ற ஆர்வத்தை எனக்குக் கொடுப்பாய், அப்பா' என்று கேட்கிறார். க.சொ. V-6 7量