பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 சினத்தைக் கொள்கிறது. அதைப் பட்சிக்கும் துணிவைக் கொள்ளும் பட்சி அது. - பணாமகுட நிகர அக்ஷம பட்ச பட்சி. ஆயிரம் பணா முடியை உடைய பாம்பைக் கண்டாலே போதும்; கொஞ்சம்கூட rமை இல்லாத கோபத்தோடு கூடிய மயில், அந்தப் பாம்பைப் கொத்திக் கொத்தி அடக்குகின்றது. கூடிமை என்றால் பொறுமை. அதற்கு நேர் விரோதம் அட்சமை. அட்சமை என்றால் பொறுமை இன்மை; கோபம். மற்றப் பாம்பாகிய கயிறுகளைப் போலப் போர் செய்ய வருகின்ற பல தலைகளை உடைய, படங்களின் கூட்டத்தை உடைய நாகப் பாம்பைக் கண்டு அஞ்சாமல், பொறுக்கும் தன்மையில்லாத கோபத்தோடு அப்பாம்பைக் கொத்திக் கொத்திப் பட்சிக்கின்ற பறவை மயில்; அதை வாகனமாக உடைய அரசன், தலைவன் முருகன். பட்சி துரங்க ந்ருப! குமரா! பறவையாகிய மயிலைக் குதிரை போன்ற வாகனமாக உடைய பெரிய நிருபன். நீருபன் - பெரிய தலைவன்; அரசன் என்று பொருள். "நிருபனே, குமரனே என்று விளிக்கிறார். அரசன் “தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்; அவனைத்தான் தேவராஜா என்பர். முருகன் எப்படி அரசனாவான்?' என்று கேட்கலாம். சூரபன்மனால் சிறையில் அடைக்கப்பட்டபோது அந்தத் தேவராஜனால் தேவர்களைக் காப்பாற்ற முடிந்ததா? தன் மனைவி சசி தேவியின் மாங்கல்யத்தைத்தான் காப்பாற்ற முடிந்ததா? இல்லை. அந்தத் தேவராஜனுக்கும் அரசனாகிய முருகன் அவ தாரம் செய்தான்; எல்லோரையும் காப்பாற்றினான். சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா பரணனாக வந்த அரசன் ஷண்முக நாதன். இந்திரன் அரசனானால் அந்த அரசனுக்கும் அரசனான சக்ரவர்த்தி முருகன். குமரன் நிருபன் என்று சொன்னவர் அடுத்து, 74