பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அஞ்ஞானத்திலே உறங்கி வீழ்ந்து கொண்டிருப்பவர்களை, "ஞானபானுவாகிய எம்பெருமான் எழுந்தருளுகின்றான். தூங்கா தீர்கள்' என்று அறைகூவி அழைப்பது சேவல். சக்தி சிவனிடத் தில் இருந்து தோன்றிய மாத்திரத்தில் முதல் முதலாகத் தோன்றி யது நாத தத்துவம். அந்த நாத தத்துவமே கோழி. அதன் பின்னர் எஞ்சியுள்ள எல்லாத் தத்துவங்களும் வெளிப்பட்டன. உலகத்துக் கோழி கூவும்போது புற இருள் விலகிப் பொழுது விடிகிறது; அஞ்ஞான இருள் நீங்கி, ஞான ஒளி பிரகாசிப்பதற்கு அடையாளமாகக் கூவும் கோழி எம்பெருமான் திருக்கரத்தி லுள்ளது; அது செஞ்சேவலாக விளங்குகிறது. 'என்னுடைய மமகாரமாகிய கொடுமுடியோடு கூடிய அகங்கார மலையைக் கூறிடுவது வேல்; அதையும் அஞ்ஞான இருளைப் போக்க வழிகாட்டும் சேவலையும் செந்தமிழால் பகர்கின்ற ஆர்வத்தை எனக்குத் தருவாயாக' என்று பிரார்த்தனை செய்து கொண்டார். மயிலின் தத்துவம் (്ഖ്, சேவல் ஆகிய இரண்டோடு, மயிலையும் பாடுகின்ற பணி எப்போதும் இருக்கவேண்டும் என்பது அருணகிரியார் ஆர்வம். முதலில் வேலையும் சேவலையும் சொன்னவர் மயிலை மறக்கவில்லை. அதனை அடுத்த அடியில் இணைத்து விடுகிறார். பணி பாச சங்க்ராம பணாமகுட நிகராட்சம பட்ச பட்சி. பணிபாசம் என்றால் பாம்பாகிய கயிறு என்று பொருள். இங்கே நாகபாசம் எது? நம்முடைய பாசபந்தங்கள்தாம். பிறவிக்குக் காரணமான இந்தப் பாசபந்தங்களுக்குக் கட்டுப் பட்டுக் கிடக்கிறோம். பாசமாகிய பாம்புக்குக் கட்டுப்படு வதனாலே உயிர் குலைந்து விடுகிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொண்டால்தான் மயக்கம் தீரும். சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற பாம்பைக் கொத்தித் கொத்திக் கொன்றுவிடுவது மயில். மயில் ஓங்காரத்தின் வடிவம். பாம்பு பெரிய பாசமாக இருப்பதனாலே, பாம்பை அடக்குகின்ற மயில் ஓங்கார மந்திர மாக இருக்கிறது. ஓங்கார மந்திரத் தியானம் பாசத்தை நீக்கும் 8O