பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் என்று பெரியவர் சொல்வர். பிரணவ மந்திரத்தைத் தினமும் ஜபித்தால் பாசங்களினின்றும் விடுபட்டு எம்பெருமானை வணங்கு கின்ற ஞானம் உண்டாகும். எல்லா மந்திரங்களுக்கும் மூலம் பிரணவம். - சுருண்டு கிடக்கின்ற குண்டலினி ஆகிய பாம்பு கிடப்பது நீங்கி ஓடவேண்டும். மூலக்கணலை எழுப்பினால் இது நிகழும் என்று யோக சாஸ்திரம் கூறும். இதற்குக் குண்டலினி யோகம் என்று பெயர். சுருண்டு கிடக்கின்ற பாம்பு வாலையும், தலையையும் நீட்டிக் கொண்டு ஓடவேண்டுமானால் மயில் வரவேண்டும். யோகிகளுக்கும் முருகன் மயில் வாகனத்தில் காட்சிகொடுத்தால் நன்மை உண்டாகும். வேண்டுகோள் இந்தத் தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கி, 'கயிறு போன்ற பாம்போடு சண்டை போடுவதும், படத்தின் தொகுதி களைக் கண்டு பொறுமை இல்லாமல் கொத்திக் கொத்தி அடக்கு வதுமாகிய பறவையாகிய மயில்’’ என்று சிறப்பித்தார். 'அந்த மயிலை வாகனமாக உடைய பெருமானே என்றும் இளைய வனே, மாரனைக் குற்சிதம் பண்ணின கும்ரனே, தகராகாசத்தில் வசிக்கின்ற குகனே, அசுரர்களைச் சங்காரம் பண்ணுகின்றவனே, கலக்கம் இல்லாதவனே, தீரனே, குணக்களஞ்சியமே, மலையைக் கூறுபோட்ட ஞானமயமான வேலையும், நாத தத்துவமாகிய சேவலையும் குற்றமில்லாத தமிழிலே பாடுகின்ற விருப்பத்தை எனக்கு அளிப்பாயாக’ என்று அருணகிரியாரைப் போல நாமும் வேண்டிக் கொள்ளலாம். ★ சிகராத்ரி கூறிட்ட வேலும்,செஞ் சேவலும் செந்தமிழால் பகர்ஆர்வம் ஈ:பணி பாசசங் க்ராம பணாமகுட நிகராட் சம்பட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா! குக!ராட் சசபட்ச விட்சோப தீர! குணதுங்கனே! 31