பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லை கடந்த இன்பம் பாடும் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின்று ஆடும் பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே, (பகைவர்களை எதிர்த்துச் சென்று அழிக்கும் போரில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற வேலை ஏந்திய முருகனுடைய திருவடிகளில், எப் பொழுதும் ஒடிக்கொண்டிருக்கும் மனத்தை அமைந்து இருக்கச் செய்யும் ஆற்றலுடையவர்களுக்கு, யுகங்கள் போய், சக உணர்வு போய், பாடுகின்ற கவுரி சுழன்று ஆடும் கூத்தை மேற்கொண்டு ஆட, பசுபதி நின்று ஆடுவான்; அப்பொழுது அதீதத்தில் சென்றால் அங்கே எல்லாவற்றிற்கும் மேற்பட்ட ஆனந்தமாக இருக்கும். - சாடும் - பகையை அழிக்கும். சமரம் - போர். சரணம் - திருவடி. பவுரி - சுழன்றாடும் கூத்து. அதீதம் - அதற்கும் மேலான நிலை. பரமாய் - மிக உயர்ந்த ஆனந்தமாய்.) நம் முயற்சி, ஒடும் கருத்தை முருகன் சரணத்தில் இருத்து வது. பின் மெல்ல மெல்லப் பிற அநுபவம் கைகூடும். முதலில் இடமும் காலமும் மறந்த நிலையில் சிவசக்தி தாண்டவ தரிசனம் கிடைக்கும்; அப்பால் எல்லாம் மறந்த இன்பம் உண்டாகும். இது கந்தர் அலங்காரத்தில் 68-ஆம் பாடல். 97