பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை பயந்த தனி வழி. இந்தப் பயத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஏற்ற துணை வேண்டும். இறைவனுடைய திருவருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று இருந்தாலும் இந்த உடம்பை விட்டு நீங்கும்போது நமக்கு மரணத் துன்பம் உண்டாகிறது. ஒரு நல்ல மாளிகை நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வழியில் போகிறோம். அந்த மாளிகை கிட்டும் மட்டும் இடையிலுள்ள வழியைத் தாண்ட வேண்டுமே! அதற்குத்தான் துணை வேண்டும். மரணம் அடைந்த ஆன்மா இறைவன் திருவடியாகிய வீட்டைச் சென்றடையும் மட்டும் தக்க துணை என்ன என்பதை அருணகிரியார் கடைசியில் சொல்கிறார். விளக்கும் ஆயுதமும் நிழலும் நீண்ட வழியில் ஒருவன் போகிறான். இராக் காலத்தில் இருள் கப்பிக் கொள்கிறது. அப்போது மறைந்திருக்கிற விலங்கு களும், திருடர்களும் வந்து துன்புறுத்துவார்கள். அதற்காக இருட்டு வழி போகும்போது ஒளி நிறைந்திருக்கிற விளக்கும், விலங்குகளை அழிக்கும் ஆயுதமும் கையில் இருக்க வேண்டும். பகலில் நெடுந்துரம் போனால் வெயிலினால் துன்பம் உண்டா கும். அதற்கு நிழல் வேண்டும். ஆகவே பகல், இரவு ஆகிய இரண்டு வேளைப் பயணத்திற்கும் ஒளிதரும் விளக்கும், ஆயுதமும், நிழல் தரும் பொருளும் நமக்கு அவசியம். நெடுவழியாகிய, பயந்தரும் தனி வழியாகிய, மரணத் திற்குப் பின்னால் உள்ள வழியில் பகல் உண்டு; இரவு உண்டு. நாம் காணுகின்ற பகல் இரவு போல் இல்லாவிட்டாலும் சொர்க்கம், நரகம் என்று சொல்கிற பகல் இரவு உண்டு. இறை வனை நம்புகிறவர்களுக்கு அவற்றால் யாதோர் இடையூறும் நேராது. இருட்டில் போகிறவனுக்கு விளக்கும் ஆயுதமுமாக இருந்து இறைவன் கையில் உள்ள வடிவேல் துணை செய்யும். வடிவேல் சுடர் உடையது. பகையைப் போக்கும் ஆயுதமாகவும் பயன்படுவது. பயந்த தனி வழிக்கு வடிவேல் ஒரு துணை. 143