பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் அநுபவங்கள் உலகப்பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை. ஆனால் அந்த அநுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்து, அப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீட்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்துவிடுவார்கள். பல துறவிகளும், யோகிகளும் மிகவும் தீவிரமாக வைராக்கியத்தோடு சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். நமக்கு முடிந்த நிலை கிடைத்துவிட்டது என்று எண்ணி நின்றுவிடுவார்கள். கடைசி யில் பெண் மயலில் சிக்கிக் கீழே விழுந்துவிடுவார்கள். இதற்கு உதாரணமாகப் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணம் என்ன? அவர்கள் லட்சிய நிலையை அடையவில்லை. அடைந்திருந்தால் இந்த உலகமே எதிர்த்து நின்று மயக்கினாலும் அவர்கள் மனம் மயங்க மாட்டார்கள். மூன்று நாடிகள் நாம் அடிக்கடி யோகம் என்று சொல்வது அஷ்டாங்க யோகத்தை. அதற்கு முக்கியமான பயற்சி மூச்சை அடக்குவது. நம்முடைய உடம்பில் மூன்று நாடிகள் இருக்கின்றன. முக்கிய மான நாடிகள் அவை; இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்று சொல்வார்கள். இடப்பக்கத்தில் ஒடும் நாடிக்கு இடை கலை என்று பெயர்; வலப்பக்கத்தில் உள்ள நாடிக்குப் பிங்கலை என்று பெயர். இரண்டுக்கும் நடுவில் முதுகுத்தண்டின் நடுவிலே செல்வது சுழுமுனை என்ற நாடி. மூக்கில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. இடப் பக்கமாக மூச்சு வந்தால் இடைகலையில் மூச்சு ஒடுகிறது என்று சொல்வார்கள். அப்படியே வலப்பக்க மூக்கில் வந்தால் அது பிங்கலை நாடியில் ஒடும். சுழுமுனை யாகிய நடு நாடியில் மூச்சு ஓடினால் இரண்டு மூக்கிலேயிருந்தும் ஒரே மாதிரி மூச்சு வரும். இந்த நடு நாடியின் வழியாக மூச்சு வெளிப்பட்டால் மனம் மிகத் தெளிவாக இருக்கும். மூச்சும் மனமும் மூச்சுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு. மூச்சுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம் மயங்குகிறது. மூச்சு வழியாக மயக்க 155